ஒருமை

ஒருமை எப்படி ஒரு காதலன் தன் காதலியை சதா நினைத்துக்கொண்டே இருப்பதால் அவனுக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் அவன் காதலி தான் தெரிகிறாள் அவர்கள் முகத்தில்   அதே போல் தான் ஆன்ம சாதகனுக்கும் அவன் சதா சிவத்தை நினைத்துக்கொண்டு இருப்பதால் அவன் சித்தத்தில் சிவமே நிரம்பி நிற்பதால் அவன் எங்கெங்கு நோக்கினும் வெளி தான் பிரம்மம் தான்   அவன் பாடுகிறான் : பார்க்க பார்க்க திக்கெலாம் பரப்பிரம்மமே   வெங்கடேஷ்  

தெளிவு

தெளிவு ஒரு காரியம் நினைத்தது   வெற்றியுடன் நடந்த பிறகு பக்தன் ஆண்டவனுக்கு  101 தேங்காய் உடைக்கிறான் அது ஏன் 101 ?? பாண்டவர்கள் பாரத யுத்தத்தில் வெற்றி  பெற்றது நாம் நம் காரியத்தில் வெற்றி அடைந்தது ஆம் அதுக்கு அவர் பலியிட்டது 101 கௌரவர் தலைகள் அவர் தம் தலைகள் பூமியில் சரிந்தன நாமும் அதுக்கு நன்றி செலுத்த 101 தேங்காய்கள் பூமியில் சிதறடிக்கின்றோம்   எப்படி ? இது சரியா ??   வெங்கடேஷ்  

கரிக்கட்டையும் –   ரத்தினமும்

கரிக்கட்டையும் –   ரத்தினமும் நாம் எல்லவரும் அறிந்தது கரிக்கட்டை தான் ரத்தினம் ஆகுது என்பது அதே மாதிரி தான் விந்து கரிக்கட்டை மாதிரி அது  பரவிந்துவாக மாறி உச்சிக்கு சென்று  நிற்கும் போது அது ரத்தினமாக மாறி ஜொலிக்குது   அதனால் முருகனுக்கு செல்வக்குமரன் –  முத்துக்குமரன் ரத்தினசாமி  –  ரத்தினவேல் என பேர்   ரெண்டும் ஒன்றே தான் நிலை தான் வெவ்வேறு   வெங்கடேஷ்