எண்ணப்படகும் – வாசிப்படகும்
எண்ணப்படகு செல்ல செல்ல
அது நம்மை உலகம் நோக்கி செலுத்தும்
இறுதியில் கல்லறை தான்
பிறவிச்சுழற்சியில் ஆட்படுத்தும்
ஆனால்
வாசிப்படகேறி மேல் செல்ல செல்ல
வெளி வெளி தான்
முடிவிலா வெளி தான் ஆனந்தம் தான்
அது தான் நம் கதி
பிறவித்தொல்லையிலிருந்து விடுதலை கிட்டும்
வெங்கடேஷ்