திருவடி தவம் – அனுபவங்கள் latest and updated

திருவடி தவம் – அனுபவங்கள்

1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும்

2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் –

3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது

4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும்

5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ் காலத்தில் வாழ்வர்
கவலை – பயம் இருக்காது

6 ஆன்மா தன் குணங்களை ஜீவன் ஆகிய நம் மீது பிரதி பலிக்கும்

7 ஒருமையில் இருப்போம்
இரவு பகல்
வெற்றி தோல்வி
இன்பம் துன்பம்
எல்லாம் போய்விடும் –

8 வருங்காலம் – நிகழ்வுகள் எல்லாம் ஆன்மா காட்டும் – வசனம் மூலம் தெரிவிக்கும்

9 சுவாசம் விடா வாழ்வு வாழ வைக்கும்
மிக குறைந்த சுவாசம் தான் தேவை ஆக இருக்கும்

10 சுவாசம் மேல் ஏறி நிற்பதால் விந்து விடா பெண் போகம் சித்திக்கும்
ஆனால் இன்பம் பன்மடங்கு இருக்கும் இது உண்மை –

11 நம் விதியை வினைகளை
தீர்த்துக்கொள்ளலாம்
தள்ளி வைக்கலாம்
திருத்திக்கொள்ளலாம்

12 மன விகாரம் குறைந்து கொண்டே வரும் – நாம் சிறிது சிறிதாக உத்தமனாக மாறுவோம் – புருஷோத்தமனாக மாறுவோம்

13  நம் குணத்தில் மாற்றம் நிகழும் – அதாவது பொறுமை நிதானம் எல்லாம் வரும்

14  நமக்கு பிறர் மீது கருணை நேசம் எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும்

இது மிக முக்யமான அனுபவம் ஆம்

இது தயவுக்கு கூட்டிச்செல்லும்

 

15  மற்றவர் படும் துன்பம் துயர் எல்லாம் நம்மால் அவர் நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியும்

16  உடலில் இருக்கும் கழிவுகள் தவம் செயும் போது வெளியேறும் – இது மூக்கில் உதட்டில் ஏற்படும் அரிப்பால் புரிந்து கொள்ளலாம்

 

17  விழிப்புணர்வு அதிகமாகிக்கொண்டே வரும்

இது உடலைக்கட்டுப்படுத்தும் தந்திரம் ஆம்

இது ஆன்மாவின் செயல் ஆம்

18   உள்ளதை உள்ளபடி அறியும் தன்மை வரும் – மனம் – உலக வாழ்வு – உறவுகள் இதில் அடக்கம்

19  பர உதவிகள் – ஞானிகள் – காட்சியும் உதவியும் நமக்கு கிடைக்கும்

20  உடலில் இருந்து மலர் – கனி வாசம் வீசும் – இது விந்துவில் தவத்தால் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் ஆம்

21  இறை நம்மைக்காக்க ஒரு காவலை வைத்துவிடும்

அவர் நம் கூடவே இருப்பார் 24*7 சூக்குமத்தில்

 

22 மனதில் சஞ்சலம் இருக்காது – தைரியம் இருக்கும்

23  நாம் முழுமை என்ற உணர்வு வந்துவிடும் – அதனால் மற்றவர் மேல் பொறாமை இருக்காது  – ஒப்பீடும் இருக்காது

 

24 மனம் அசைவை ஒழித்து  நிற்கும் சுவற்றில் ஆணி அடித்த படம் போல்

25 தாரணை அனுபவம் சித்திக்கும் – அதாவது 100 எண்ணம் போய் “ ஒரே எண்ணம் சீராய் ஓடும் “ இது பதஞ்சலி யோகத்தின் ஆறாம் படி

26 பொருள்/ நேரம்/ சக்தி/ உடல் அசைவில் எல்லாம் சேமிப்பு பார்க்கும்

27 வாழ்வில் ஒளிமயமான பக்கம் பார்க்க ஆரம்பிக்கும்

28  விழிப்புணர்வு உடலில் எங்கும் பரவி நிற்கும்

29  வெப்பத்தால் உதடு  கண் எரியும் – உதடு  காய்ந்து போம்

30  ஒரு வித அமைதி கிட்டும் – அது உபசாந்தம் ஆம்

31  மன மயக்கங்கள் குறைந்து கொண்டே வரும்

52  நம் வாழ்வின் பொறுப்பு ஆன்மா தன் கையில் எடுத்துக்கொள்ளும்

அதனால் எல்லாம் சரியான பாதையில் செல்லும்

33  நம் வாழ்வின் செயல்பாடுகள் எல்லாம் பயனுள்ளதாகத்தான் இருக்கும் வீண் என்ற சொல்லே இருக்காது

34   Our Productivity ,  Efficiency and Utilisation of resources – Time Money Utilities   will increase manifold

35  பதஞ்சலி யோகத்தின் 7 ம் படியான “ தியானம் “ – எண்ணமிலா நிலை சித்திக்கும்

மனனமிலா நிலை சித்திக்கும்

36  உருவம் எலாம் கரைந்து அருவ நிலை அனுபவம் சித்திக்கும்

அப்போது மனதால் இயங்க முடியாது

மனம் உருவம் பற்றித்தான் செயல்படும்

37  கண்மணி வல்லபத்தால் மனம் அடங்கிக் கொண்டே வரும்

38   சாதகன் வீரன் ஆக மாறிக்கொண்டே வருவான் – வீரமிக்க மணியால் – விந்து ஆகிய மணியால்

39  பார்வை நோக்கம் குறுகியதிலிருந்து – கண்டத்தில் இருந்து அகண்டமாக விரிவடையும்

எல்லாம் மிக அற்பமாக தோன்றும்

40 உடலை அருள் ஒளியால் காயகல்பம் செய்யும்

தேய்ந்து போன ராஜ உறுப்புகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்

வலு சேர்க்கும்

அதன் வாழ் நாளை நீட்டிக்கச் செயும்

 

41  பந்தம் அறுத்துக்கொண்டே வரும்

உலகத்துடன் ஒட்டா நிலை வாழ்வு வரும்

42  ஆயுள் நீட்டிப்பு அளிக்கும் தகுதி இருப்பின்

43 சூக்கும உடலை ஸ்தூல உடலில் இருந்து பிரித்து சிகிச்சை அளிக்கும்

ஒளி அணுக்களை சீர் செய்து  உடல் நலத்தை சரி செய்யும்

44 பசி தூக்கம் காமம் பெண் போகம் எல்லாம் அதிகமாகி உச்சத்துக்கு சென்று – பின் அடங்கிவிடும்  – நாதத்தின் சகாயத்தால்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s