அவிநாசி – ஊர் பெருமை சிறப்பு
இந்த தலம் கோவையில் இருந்து 36 கி மீ தூரத்தில்
இதன் அர்த்தம் யாதெனில்
1 வினாசம் = இறுதி முடிவு
அவினாசம் = முடிவில்லாதது
அவினாசி = முடிவில்லாதவன் அந்தமில்லாதவன்
2 அவிநாசி = மூடி இருக்கும் நாசி –
அதாவது மூடி இருக்கும் சுழுமுனை வாசல்
உண்மை சம்பவம் அவினாசி
அற்புதம் நடந்த திருத்தலம் ஆம்
இங்கு ஒரு சமயம் சுந்தரர் நாயனார் எழுந்தருளினார்
ஒரு வீட்டில் உப நயனம் நடந்து கொண்டிருந்தது
பக்கத்து வீட்டில் ஒரே அழுமை சோகம்
ஏன் என விசாரித்தார்
பக்கத்து வீட்டில் அவர் மகன் முதலை விழுங்கி இறந்துவிடவே அவனுக்கும் அந்த உப நயன வீட்டுப்பையனும் ஒரே வயது தான்
அவன் பெற்றோர் இதை நினைத்து கவலைப்படுகிறார்கள் என்றனர்
சுந்தரர் தன் மனம் இரங்கி ; ஒரு திருப்பதிகம் பாட :
மீண்டும் அந்த இடத்தில் நதி ஓட , அந்த முதலை வந்து தன் வாய் திறந்து அந்த பாலகனை கக்கி விட்டு சென்றது
ஆனால் என்ன விசேஷம் என்னவெனில் ??
அந்த பாலகன் முழுங்கப்பட்ட போது இருந்த வயது இல்லாமல் – எத்தனை ஆண்டுகள் கடந்துள்ளதோ ?? அந்த வயது கூடி இருந்தது தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது
கோபுரத்தில் இந்த சம்பவம் சிலையாக வடித்து வைத்திருப்பர்
இந்த சம்பவம் நம் அருளாளர்கள் செய்த காலப்பயணமும் அதன் விளைவும் ஆம்
வெங்கடேஷ்