அமுதகலை – சன்மார்க்க விளக்கம்
குனித்த புருவமும்,
கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும்,
பவளம் போல் மேனியில் “ பால் வெண் நீறும் “ ,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே
.
இது திரு ஞான சம்பந்தர் தேவாரம்
இதில் பால் வெண் நீறும் என்ற வார்த்தை தான் அமுதகலை விளக்கத்தை அளிக்கும்
அது எப்படி இருக்கும் எனில் ??
1 பால் போல் வெண்மை நிறத்துடனும்
2 வெண் நீறு போல் பொடிப் பொடியாக தேகத்தில் விழும்
கோவிலில் ஐயர் அளிக்கும் திரு நீறு மாதிரி பொடிப் பொடியாக விழும்
அதாவது சிவத்தின் மேனியே அமுத வெள்ளம் போல் இருக்குதாம் – அமுத வடிவானதாகவே இருக்குதாம் – மிக்க குளிர்ச்சியாக இருக்கும்
ஆனால் சன்மார்க்க அன்பர் சமய மதம் பொய் என ஆதியில் உரைத்த அபெஜோதி என பழைய பஞ்சாங்கம் பாடுகிறார்
எங்கே எப்படி பொய் வந்தது ??
வெங்கடேஷ்