கவி பாதி ஞானியர்

கவி பாதி ஞானியர் கவி : உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதிலை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதிலை ஆன்ம சாதகனும் : ஆம் திருவடி  அழகை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதிலை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதிலை வெங்கடேஷ்

தற்போத ஒழிவு அனுபவம்

தற்போத ஒழிவு அனுபவம்   எப்படி இருக்கும் எனில் ?? புலி வாயில் அகப்பட்ட மான் உயிரற்ற உடல் எப்படி தொங்குமோ ?? அவ்வாறே தான் ஆன்ம சாதகனின் அறிவு அசைவற்று கிடக்கும் அருளின் திருவடியின் பிடியில் பிடி இறுக இறுக போதம் ஒழிந்த படி இருக்கும் வெங்கடேஷ்

உற்றுப்பார்த்தலும் – உற்று உற்றுப்பார்த்தலும்

உற்றுப்பார்த்தலும் – உற்று உற்றுப்பார்த்தலும் ஓஷோ – எழுத்தாளர் பாலகுமாரன் பரிந்துரைப்பது எலாம் ஒன்றே “ உற்று நோக்கவும் “ இது எலாம் செயும்  கொடுக்கும் ஆனால் உண்மையான சாதனம் தவம் : “ உற்று உற்றுப்பார்க்கவும் “ கண்ணாடி பயிற்சியிலும் – மேல் நிலை பயிற்சியிலும் உற்று உற்றுத்தான் பார்க்க வேணும் அது தான் சரி முன்னது பிள்ளைகள் விரல் சூப்புவது மாதிரி பின்னது ஏறா நிலைக்கு ஏற்றும் வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம் மனைவி சொல்லை தட்டாமல் கேட்கிறான் ஆனால் உடல் கூறும் மொழிகளை தட்டிக்கழிக்கிறான் ஓய்வு கேட்டால் மறுக்கிறான் சில உணவு –சுவை கேட்டால் மறுக்கிறான் என்ன ஜென்மமோ ?? வெங்கடேஷ்