ஞானியர் ஒற்றுமை
ஞானியர் ஒற்றுமை பட்டினத்தார் : செல்வரைப் பின்சென்று சங்கடம்பேசித் தினந்தினமும்பல்லினைக் காட்டிப் பரிதவியாமல் பரமானந்தத்தின்எல்லையில் புக்கிட ஏகாந்தமாய் எனக் காமிடத்தேஅல்லல் அற்று என்றிருப்பேன் அத்த னே! கயிலாயத்தனே! அழுகணி சித்தர் : புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டிபல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்புல்லரிடம் போகமல் என் கண்ணம்மாபொருளெனக்குத் தாராயோ வெங்கடேஷ்