சிரிப்பு
ஒரு பெங்களுர்காரரு, நம்ம ஆளு, சர்தார்ஜியும் நண்பர்கள்.
மூணு பேரும் ஒரே ஆபிசில வேலை செஞ்சாங்க. அவங்க ஆபீஸ் ஐந்து தள கட்டிடம்.
இவங்க நாலாவது தளத்தில வேலை செய்றதால, மதியம் சாப்பிடறது அந்த ஆபீஸோட மொட்டை மாடியில.
பெங்களுர் காரர் டிபன் பாக்ஸை திறந்தார்.
அடச்சே, இன்னைக்கும் இட்லியா. தினமும் இட்லியாவே இருக்கு. நாளைக்கும் இட்லின்னா இங்கேயிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்குவேன்னாரு.
நம்மாளு, டிபன் பாக்ஸை திறந்தாரு. ச்சே இங்கேயும் இட்லி. நாளைக்கு இதேன்னா நானும் தற்கொலை செஞ்சிக்குவேன்னாரு.
சர்தார்ஜி டிபன்பாக்ஸை திறந்தாரு. ச்சட் இன்னைக்கும் இட்லி, டுமாரோ இட்லின்னா நானும் சூசைட் அப்படின்னாரு.
மறுநாள், மூணு பேரும் டிபன் பாக்ஸை திறந்தாங்க. மூணு பாக்ஸ் லையும் இட்லி இருக்க மூணு பேரும் அஞ்சாவது மாடியிலிருந்து குதிச்சிட்டாங்க.
ஆபத்தான நிலைமையில மருத்தவமனையில தற்கொலைக்கான காரணத்தை சொன்னாங்க, மூணு பேரும்.
பெங்களுகாரரோட மனைவி புலம்புனாங்க, அடப் பாவி மனுஷா என் கிட்டே சொல்லி இருந்தா வேற ஏதாவது கட்டி கொடுத்து இருப்பேனே.
நம்மாளோட வீட்டுக்காரம்மவும் இது தெரியாம போச்சே. தெரிஞ்சிருந்தா வேற செய்து கொடுத்து இருப்பனே அப்படின்னு.
சர்தார்ஜி யோட மனைவி ஒ ன்னு கத்திக்கிட்டே சொன்னாங்க, எனக்கு ஒண்ணுமே புரியலை. தினமும் அவர் தானே சமைச்சி மதியத்திற்கு கட்டிக்கிட்டு வராரு.