இக்காலமும் எக்காலமும்

இக்காலமும் எக்காலமும் இக்காலத்தில் பிள்ளைகள் ஆணானாலும் பெண்ணானாலும் பிஞ்சிலே பழுத்திருக்கார் எலா விஷயம் தெரிஞ்சிருக்கு எக்காலத்திலும் சரி ஆன்ம யோக சாதகர் பழுக்கினும் பிஞ்சு தான் மூப்பு அடைந்திருந்தாலும் வெளிப்படையாகத் தெரிவதிலை முகத்தில் தேஜஸ் இருக்கும் தோல் சுருக்கம் கிடையா இளமை ஆரோக்கியம் திடம் சுறுசுறுப்பு வீரியம் எலாம் இருக்கும் இது தவத்தின் பயன் பரிசு வெங்கடேஷ்

கடுவெளிச் சித்தர் பாடல்

கடுவெளிச் சித்தர் பாடல் எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. பொருள் : எட்டிரெண்டு  அறிந்து ,  கூட்டி ,  உள்ளுக்குளே ஒருமை அடைந்து – நெற்றிக்கண் திறந்து அதனுளே வெட்டவெளி தரிசனம் ஆகி அமுதக்கடலில் மூழ்கி களிப்பாய் வெங்கடேஷ்

வினைகள் தீர்க்கும் விதம்

வினைகள் தீர்க்கும் விதம் வருவதுக்கு முன்பே காட்டி ,  அதை தீர்ப்பதாகும் வருவதை முன்பே காட்டாமல் , – தீர்த்தபின் காட்டி தெரிவிப்பதாகும் ஆன்மா தன் அதிகாரத்துக்குட்பட்ட வினை தீர்ப்பதாகும் ஆன்மாவால் முடியாததை  சிவத்தின் கருணையால் – அனுமதி பெற்று தீர்ப்பதாகும் உடன் தீர்ப்பதாகும் சில காலம் கழித்து தீர்ப்பதாகும் என் அனுபவம் வெங்கடேஷ்

அகத்தியர் புராணம் – உண்மை விளக்கம்

அகத்தியர் புராணம் – உண்மை விளக்கம் இவர் இமயத்தில் இருந்து தெற்குக்கு பூமியை சமன் செய வந்ததாக புராணம் உரைக்குது இதன் உண்மை பொருள் : நம் மனம் எப்போதும்  இருமையில் சமனில்லாமல் சஞ்சலத்துடனே இருக்கு       அதை சமன் செய வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த புராணம் எப்படி செய்வது ?? பயிற்சி மூலம் தான் 1 சுவாசப் பயிற்சி  – அதை கவனித்தல் 2 மனதை கவனித்தல் 3 பார்வை மூலம் சமன் செய்தல்…