அசைவொழித்தல் பெருமை
பாம்பாட்டிச் சித்தர்பாடல்
தன்னையறிந் தொழுகுவார் தன்னை மறைப்பார்
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொரு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே
பொருள் :
தன்னை மறைத்தல் எனில் – அசைவற்றிருத்தல்
அசைவற்றிருந்தால் அது ஆன்ம நிலை ஆம்
அவர் தன்னை அறிந்திருப்பர்
அவ்வாறு தனை அறியாதவர் எலாம் தன் உடல் போதம் அசைத்த படி இருப்பார்
அந்த நிலை எய்தியோர் தன்னை தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்கார்
அவர் சிவத்தை தெய்வம் என வணங்குவார்
உலகம் கூறும் கருத்து :
ஞானியர் தன்னை தன் ஞானத்தைக் காட்டிக் கொள்ளார்
ஞானியர் அல்லாதோர் தன்னை தன் அறிவை புலமை வெளி உலகுக்கு தெரிவித்து பெருமை பறை சாற்றுவார்
அது தவறு
வெங்கடேஷ்