சுத்த தேகம் இலக்கணம்
சுத்த தேகம் இலக்கணம் ஆறாம் திருமுறை உற்ற துரைத்தல் விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தேவரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே. பொருள் : விரைவாக படிகள் பல கடந்தேன் அமுதம் உண்டேன் மனம் கரைய கண்ணீர் பெரும ஆன்ம தரிசனம் பெற்றேன் அதன் பயனாம் அதன் ஒளி என்னுடலில் கலந்து அது என் உடலை பொன் ஒளி ஆக…