கண்மணி பெருமை

கண்மணி பெருமை கோழி தன் எல்லா குஞ்சுகளையும் தன் இறக்கைகளுக்குள் அடக்கிவைத்துக் கொளும் ஆன்ம சாதகனும் தன் தவத்தால் அதன் பலத்தால் விழிப்புணர்வில் உச்ச பலத்தால் மனம் அசைவு தத்துவம் எலாம் அடக்கிவிடுவான் வெங்கடேஷ்

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை பாலில் இருந்து தயிர் மோர் வெண்ணெய் நெய்  என வரிசை கட்டி நிற்பது போல் திருவடி தவம் – சிவ யோகத்தில்  எல்லா யோகமும் அடக்கம் ஹட யோகம் பரியங்க யோகம் கேசரி யோகம் சந்திர யோகம் குண்டலினி யோகம் வாசி யோகம்  என எல்லாமே அடக்கம் ஆனால் உலகத்தில்  எல்லாத்தையும் தனித்தனியா கற்றுத்தருகிறார் மக்களை ஏமாற்றுகிறார் வெங்கடேஷ்

இக்காலத்தில் குரு எப்படி ??

இக்காலத்தில் குரு எப்படி ?? எனில் ?? அஸ்திவாரம் இல்லா கட்டிடம் மாதிரி பேசிக்கொண்டே போகின்றார்  – பயிற்சியும் அளிக்கிறார் 1 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா – பல நூல் எழுதியிருப்பினும்  – பயனிலை எல்லாத்துக்கும்  தயவு – தயா ஒழுக்கம் – என இதையே சதாகாலமும் கிளி போல் உரைத்தபடி இருப்பார் இவர் சன்மார்க்கக்  கிளி – நானும் தான் – திருவடி – கண் தவம் வலியுறுத்தும் கிளி    ஒரு சாதனமும் வேண்டாமாம்…