இக்காலத்தில் குரு எப்படி ??

இக்காலத்தில் குரு எப்படி ??

எனில் ??

அஸ்திவாரம் இல்லா கட்டிடம் மாதிரி பேசிக்கொண்டே போகின்றார்  – பயிற்சியும் அளிக்கிறார்

1 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா – பல நூல் எழுதியிருப்பினும்  – பயனிலை

எல்லாத்துக்கும்  தயவு – தயா ஒழுக்கம் – என இதையே சதாகாலமும் கிளி போல் உரைத்தபடி இருப்பார்

இவர் சன்மார்க்கக்  கிளி – நானும் தான் – திருவடி – கண் தவம் வலியுறுத்தும் கிளி   

ஒரு சாதனமும் வேண்டாமாம்  – அதனால் ஒன்றும் செயவிலை –  ஒரு அனுபவமுமிலை

சாமி – தயா ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் போதும்  , தவம் சாதனம் எதுவும் தேவையிலை  – நெற்றிக்கண் திறந்து கொள்ளும் – எல்லா சித்தியும் கைவசம் – நல்ல சிரிப்பு வேடிக்கை இலையா ??

இவர் தொண்டரும் சீடரும் இதை “ நம்பி  “ = மோசம் போய்விடுகிறார்

இவர்  சத்திய ஞான சபை  தத்துவ விளக்கம் நூலில் – மிக முக்கியமான விளக்கமாக – எப்படி உச்சிக்குழி சேர்வதுக்கான உடல் அமைப்பு பத்தி விளக்கம் அளிக்கவிலை

அவர்க்கு அது பத்தி அறியவிலை – அருள் இல்லை

ஆனால் இவரோ சித்தர்க்கு அருள் விளங்காத காரணத்தால் அவர் மரணமிலாப்பெரு வாழ்வு அடையவிலை என குறை காண்கிறார் – சிரிப்பு தான்

அவராவது ஜீவ சமாதி அடைந்தார் எனில் , இவர் மரணம் தான் தழுவினார் – அதை அவர் மக்கள் ஏற்றுக்கொள்வதிலை

ஆனால் சித்தர் பெருமக்களோ – அவர் காட்டிலும் அறிவில் – அனுபவத்தில் பன்மடங்கு உயர்ந்து விளங்குகிறார் என்பதில்   ஐயமிலை   

இவர் – தன் பெயர் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டி – தயாபெருஞ் ஜோதி என புது மந்திரத்தை  அருட்பெருஞ்சோதிக்கு இணையாக ஏற்படுத்தினார்

பின்னர் – சத்திய ஞானக்கோட்டம் என சத்திய ஞான சபைக்கு ஈடாக கட்டினார்

2 சேலம் குப்புசாமி – பலப்பல நூல் – ஒலி நாடா இருப்பினும் – தவத்தில் எப்படி திருவடி – கண் பயன்படுத்தி – நெற்றிக்கண் திறப்பது என்பது தெரியவிலை

திருவடி ஞானம் இல்லை

அதனால் இவர்க்கும் அனுபவமே இலை

நூல் எழுதுவது – ஒலி நாடா வெளியிடுவது தான் வேலை

ஆனால் இருவரும் முடிவு – வெட்டவெளி – பகரக்குழி என சரியாக உரைக்கினும் , அதை சென்று அடையும் வழி தெரியவிலை

சேலத்துக்காரர்   – உலகில் இருக்கும் எல்லா யோகத்துக்கும் விளக்கம் அளித்து விட்டு , சன்மார்க்க தவம் – கண்ணாடி – விளக்கு வைத்து செய்வது எப்படி என் தெரியவிலை 

கண்ணின் உஷ்ணம் கிரகித்து அதை நெற்றிக்கு உளே செலுத்த வேணுமாம்  – அப்போது அது திறந்து கொள்ளுமாம்

நல்ல சிரிப்பு வேடிக்கை இலையா ??

இருவர்க்கும்  புருவக்கண் பூட்டுக்கும் நெற்றிக்கண்ணுக்கும் வித்தியாசம் தெரியவிலை

புருவமத்திக்கும் நெற்றி நடுவுக்கும் வித்தியாசம் தெரியவிலை

ஆனால் சன்மார்க்கத்தில் தவிர்க்க முடியாத பெரும் புள்ளிகள் ஆகிவிட்டார்கள்

3 வேதாத்திரி

திருவடி ஞானம் இல்லாதவர் .  

இவர் தன் பெயர் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டி , மன வளக்கலை மன்றம் ஏற்படுத்தி , ஓங்கார மண்டபம் கட்டினார்

ஆனால் இவர் அளிக்கும்

குண்டலினி  – காயகல்பம் விளக்கமும் – பயிற்சியும் தவறானதாகும்

அடிப்படை  இல்லா சேதியாகும்

இவர் வழிவரும் சீடர்கள் தொண்டர்களும் – அந்த தவறை – அப்படியே ஒத்தி எடுத்து  செய்து வருகிறார் – பரப்பியும் வருகிறார் 

என்ன இன்னம் கொஞ்சம் மசாலா சேர்த்துக்கொள்கிறார் – தற்காலத்துக்கேற்றபடி

 இப்படித் தான் இருக்கார் தற்கால யோகக் குருக்கள்

ஆனால் சு மா யோகீஸ்வர்ர் உரை – அனுபவ – ஞான உரை ஆம்

அதனால் இவர் நூல் முன் இவர் எல்லா நூல் நிற்க முடியாது

வெங்கடேஷ்

4 thoughts on “இக்காலத்தில் குரு எப்படி ??

 1. சரி யார் சு மா யோகீஸ்வரர் சொன்னால் நன்றாக இருக்கும்

  Like

  • இவர் பெயர் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் – இவர் தான் திருவாசகத்துக்கு அனுபவ ஞான உரை எழுதியிருக்கார் – சமாதி அடைந்த ஞானி

   Like

 2. எல்லாம் வல்ல , வள்ளல்பிரான் உங்களுக்கு உதவி புரியட்டும் ..!! பெரியவர்களை பற்றி தவறாக நக்கல் செய்ய வேண்டாம் ..!!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s