அன்பர் உரையாடல்
உண்மை சம்பவம் – 2020
ஒருவர் என் அனுபவ பதிவைப் படித்துவிட்டு ,
அவர் :
நீங்கள் என்ன தான் எழுதினாலும் , இவர்கள் – சன்மார்க்க அன்பர்கள் சோறு போடுவதில் இருந்து தவத்துக்கு மாறமாட்டார்கள்
அவர் தவம் கற்றுக்கொள்ள மாட்டார்கள்
அவர்க்கு அதெலாம் ஒரு பொருட்டே அல்ல
அவர்க்கு வேண்டியதெலாம் – மாய மந்திரம் செய்து பிரச்னை தீர்ப்பவர்
- வீட்டு பிரச்னை தீர வழி – பணம்
- நோய் தீர்க்கும் உபாயம்
- எதிர்காலம் பத்தி அறிதல்
இது தானே அன்றி – ஞானம் எல்லாம் அல்ல
மேலும் இந்த அன்னதானம் வைத்து வாழ்க்கை – பிழைப்பு நடத்த வழி தெரிந்து கொண்ட பின் , அதை நன்கு பயன்படுத்தி கொள்கிறார்கள்
அவர்களை மாத்த முடியுமா ??
தவம் செய்வோரையும் கெடுத்து விடுகிறார் – ஜீவகாருண்ணியம் தான் கரை சேர்க்கும் – தவம் அல்ல என குழப்பிவிடுகிறார்
நான் : உண்மை தான் .
எப்படி கிறித்தவர் சுகமளிக்கும் கூட்டம் நடத்தி ஏமாத்தற மாதிரியா ??
நோய் குணமாகிவிட்டது
கண் தெரிகிறது
கை கால் வந்துவிட்டது என்ற மாதிரியா ??
அவர் : ஆமாம் ஆமாம்
வெங்கடேஷ்