அருட்பா

அருட்பா படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப் பார்த்திடலும் அடக்கிஉறும் பரிசம்எலாம் அடக்கித் தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தம்எலாம் அடக்கிச் சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்கு குதித்த துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே. அதாவது – ஆசை , ஐம்புலன் அடக்கியும் – சாதி மதம் சமயம் எனும்  பொய் நீக்கியும்  ,  மனக்குரங்கை அடக்கி எனை ஆண்ட சிகையினுள் இருக்கும் சுத்த வெளியில்…

கடுவெளிச் சித்தர் பாடல்

கடுவெளிச் சித்தர் பாடல் கூட வருவதொன் றில்லை – புழுக் கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை தேடரு மோட்சம தெல்லை – அதைத் தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. பொருள் : நாம் இறந்து எதுவும் எடுத்து செல்வதிலை ஆன்மா , இந்த புழு பிடிக்கும்  புலால் உடம்பு எடுத்து  இந்த உலகினில் வாழ்வது தொல்லை விடுதலை ஆகிய மோட்சம் தான்  தீர்வு அதை தேடுவதுக்கும் – அடைவதுக்கும் வழி யாரும் அறியவிலை வெங்கடேஷ்

நிகழ் காலத்தின் பெருமை

நிகழ் காலத்தின் பெருமை நினைவு ஒன்றும் நினையாமலிருக்க நிகழ் காலத்தில் இருத்தல் அவசியம் அங்கிருக்க பழகணும் அப்போது  மனமும் அசைவும் இருக்காது வெங்கடேஷ்

திருமந்திரம் – மூல பந்தனம் – சன்மார்க்க விளக்கம்

திருமந்திரம் – மூல பந்தனம் – சன்மார்க்க விளக்கம்   மேல்கீழ்  நடுப்பக்க மிக்குறப் பூரித்து பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து மாலாகி உந்தியுட்  கும்பித்து வாங்கவே ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே பொருள் : இதுக்கு நம் சிவ யோகியர் – ஞான தேசிகர்கள் உந்தி = தொப்புள் என தவறான பொருள் எடுக்கிறார் உள் தீ பறக்கும்  இடம் எதுவோ அதுவே உந்தி – தொப்புள் அல்ல அதனால்  சுவாசல் இடம் வலம் என…

” சிவ யோகம் ” பெருமை

” சிவ யோகம் ” பெருமை ஏன் சிவ யோகம் ஆற்ற வேணுமெனில் ?? நமசிவய வில் – சிவ வுக்கு அடுத்து இருப்பது ய . சி – வ ஆகிய கனலும் காற்றும் கூடிடில் – அது “ ய “ அனுபவமாகிய ஆன்மாவுக்கு இட்டுச்செல்லும் தானாகவே இதையே பயிற்சியில் புகுத்தியுள்ளார் நம் யோகியரும் ஞானியரும் அதனால் இது அடிப்படையான பயிற்சி ஆகும் – உயர் அனுபவத்துக்கு அதனால் எந்த யோகத்துக்கும் இந்த அனுபவம்…

பரியங்க யோகம் – விந்து ஜெயம்

சுப்பிரமணியர் சிவயோகம் 37 பரியங்க யோகம் – விந்து ஜெயம்   சுப்பிரமணியர் சிவயோகம் 37 தானப்பா ஒழுகாது பிராணவாயுவும் தன்னைவிட்டு புறம்போகாத் தன்மை கேளே வேணப்பா இருகதியும்  குதத்துயடக்கி மேலும் மலவாயிலையும் முன்னே வாங்கி தேனப்பா அபான வாயுவை மேலேற்ற செய்தால் பிராணவாயுவும் எதிர்த்து மோனப்பா அபானவாயுவுடன் சம்பந்தம் முன்னலாகில் மலஜலங்கள் அடையாதென்னே பொருள் : சுவாசத்தை குதமாகிய புருவ மத்தியில் அடக்கி – அதன் பின் , அபானனை  மேலேற்றி – பிராணனுடன் கலக்க வைத்தால்,…

காரை சித்தர் – சித்துவிளையாட்டு

காரை சித்தர் – சித்துவிளையாட்டு உண்மை சம்பவம் இவர் பேரன் என்னை சென்னை வீட்டில் இம்மாதம் சந்தித்த போது கூறியது அப்போது சித்தர் ( இயற்பெயர் – ராகவன் ) தன் பள்ளியிலேயே பல சித்துக்களை புரிந்துளதாக அவர் தெரிவித்தார் ஒரு சமயம் – அவர் ஆசிரியர் – கிறித்தவர் – தன் இடத்துக்கு திரும்பிய போது , எல்லா சக ஆசிரியரும் அவரைப்பார்த்து சிரித்தார்களாம் ஏன் ?? என கேட்க , சென்று கண்ணாடி பார்க்கவும்…

ஊடகமும் –  யோகா குருவும்

ஊடகமும் –  யோகா குருவும் தவறான  செய்தி பரப்பும் ஒரு பக்கம் சாய்ந்து செய்தி பரப்பும் ஊடகம்  ( கொரோனா தடுப்பு ஊசி மாதிரி ) தனக்கு வேண்டியவர் ( கட்சி )  செய்தி பரப்பியும் ஆகாதோர் செய்தி இருட்ட்டிப்பு செய்யும் அது விபச்சாரம் ஆகுதோ ? அதனால் வேசி ஊடகம் என்கிறது உலகம் அதே மாதிரி தவறான கருத்து கற்றுக்கொடுக்கும் யோகா குருவும் விபச்சாரம் செய்கிறவர் தான் ஆவார் ( குண்டலினி – உந்தி –…

காகபுசுண்டர் பெரு நூல் காவியம் – “ பத்தாம் வாசல் “  பெருமை

காகபுசுண்டர் பெரு நூல் காவியம் – “ பத்தாம் வாசல் “  பெருமை அறிவான கண்ணெதென்றால் புருவவாசி அங்கத்திற் பம்பரம்போல் ஆடினாக்கால் முறிவான பூட்டுடைத்து புருவமத்தி மூக்கோடும் வாசியது நெற்றியேறில் தெறிவான யிவ்வாசல்  பத்தாம் வாசல் சிறுவாசல் அறிவுவாசல் யோகவாசல் குறியான மணிவாசல் – குருவின் வாசல் கோபுர வாசல் தெரிவாயானால் பாரே பொருள் : சித்தர் ப கரக் குழி – உச்சிக்குழி ஆகிய பத்தாம் வாசல் பத்தி பாடுகிறார்  மூக்கில் ஓடும் சுவாசம் ,…