அருட்பா

அருட்பா படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப் பார்த்திடலும் அடக்கிஉறும் பரிசம்எலாம் அடக்கித் தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தம்எலாம் அடக்கிச் சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்கு குதித்த துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே. அதாவது – ஆசை , ஐம்புலன் அடக்கியும் – சாதி மதம் சமயம் எனும்  பொய் நீக்கியும்  ,  மனக்குரங்கை அடக்கி எனை ஆண்ட சிகையினுள் இருக்கும் சுத்த வெளியில்…

கடுவெளிச் சித்தர் பாடல்

கடுவெளிச் சித்தர் பாடல் கூட வருவதொன் றில்லை – புழுக் கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை தேடரு மோட்சம தெல்லை – அதைத் தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. பொருள் : நாம் இறந்து எதுவும் எடுத்து செல்வதிலை ஆன்மா , இந்த புழு பிடிக்கும்  புலால் உடம்பு எடுத்து  இந்த உலகினில் வாழ்வது தொல்லை விடுதலை ஆகிய மோட்சம் தான்  தீர்வு அதை தேடுவதுக்கும் – அடைவதுக்கும் வழி யாரும் அறியவிலை வெங்கடேஷ்

நிகழ் காலத்தின் பெருமை

நிகழ் காலத்தின் பெருமை நினைவு ஒன்றும் நினையாமலிருக்க நிகழ் காலத்தில் இருத்தல் அவசியம் அங்கிருக்க பழகணும் அப்போது  மனமும் அசைவும் இருக்காது வெங்கடேஷ்

திருமந்திரம் – மூல பந்தனம் – சன்மார்க்க விளக்கம்

திருமந்திரம் – மூல பந்தனம் – சன்மார்க்க விளக்கம்   மேல்கீழ்  நடுப்பக்க மிக்குறப் பூரித்து பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து மாலாகி உந்தியுட்  கும்பித்து வாங்கவே ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே பொருள் : இதுக்கு நம் சிவ யோகியர் – ஞான தேசிகர்கள் உந்தி = தொப்புள் என தவறான பொருள் எடுக்கிறார் உள் தீ பறக்கும்  இடம் எதுவோ அதுவே உந்தி – தொப்புள் அல்ல அதனால்  சுவாசல் இடம் வலம் என…

” சிவ யோகம் ” பெருமை

” சிவ யோகம் ” பெருமை ஏன் சிவ யோகம் ஆற்ற வேணுமெனில் ?? நமசிவய வில் – சிவ வுக்கு அடுத்து இருப்பது ய . சி – வ ஆகிய கனலும் காற்றும் கூடிடில் – அது “ ய “ அனுபவமாகிய ஆன்மாவுக்கு இட்டுச்செல்லும் தானாகவே இதையே பயிற்சியில் புகுத்தியுள்ளார் நம் யோகியரும் ஞானியரும் அதனால் இது அடிப்படையான பயிற்சி ஆகும் – உயர் அனுபவத்துக்கு அதனால் எந்த யோகத்துக்கும் இந்த அனுபவம்…