சிரிப்பு – சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி

சிரிப்பு – சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி 

கற்பனை தான்

பழனி திருவண்ணாமலை சாது குழுக்கள்  நடத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம்

 இடம் : பொள்ளாச்சி அடிவாரம்

காலை 5 மணி : துயில் நீங்கல்

மூலிகைப் பல்பொடி கொண்டு பல் துலப்பது

பின்னர் கரிசாலை தூதுவளை பொடி + வென்னீர் கலந்து குடித்தல்

மல ஜலம் கழித்தல்   

6 – 6.30  மணி :  

சுவாசப் பயிற்சி ( சிவ வாசி யோகம் )  

வாசிப்பவர்  சிரிக்கக்கூடாது 

6 .30  – 7 மணி :

ஆவாரம் பூ தேநீர்

காலை உணவுக்கு வேண்டிய காய்கறிகள் நறுக்குவது

சாம்பாருக்கு  – கத்திரி

வடைக்கு மாவு அரைத்தல்

மிளகு தூள் அரைத்தல் மாதிரி

7 – 8 : பொங்கல் + வடை  சமைத்தல்

8 – 9 : சன்மார்க்க அன்பர்க்கு உணவு பரிமாறல் – வண்டியில் வைத்து வேண்டியவர்க்கு அளித்தல்

9 -10 : காலை சிற்றுண்டி  

10 – 11 : அரிசி களைதல்

மதிய உணவுக்கு காய்கறி நறுக்குதல்

பூண்டு உரித்தல்

வெங்காயம் உரித்தல் நறுக்குதல்

தக்காளி நறுக்குதல் மாதிரி

11 – 12  : தக்காளி சாதம் தயாரித்தல்

12 – 1  : அன்னமிடல்  ,  சன்மார்க்க அன்பர்க்கு உணவு பரிமாறல் – வண்டியில் வைத்து வேண்டியவர்க்கு அளித்தல்

1 –  4 வரை : உண்டு , நூல் ஓதல் – ஓய்வு இத்யாதி இத்யாதி

4 – 4.30 : ஆவாரம் பூ தேநீர்

  5.0 – 6.30 – சன்மார்க்க சத்விசாரம் 

 6.30 –  இரவு சிற்றுண்டிக்கு வேண்டிய வேலைகள் செய்தல்

8.00 : சன்மார்க்க அன்பர்க்கு உணவு பரிமாறல் – வண்டியில் வைத்து வேண்டியவர்க்கு அளித்தல்

பயிற்சிக்கு வந்த வெளி நபர் :

என்னங்க – மூணு வேளை சாப்பாடு தயார் செய்றது தான்  சன்மார்க்க வாழ்வியலா ?? இதெலாம் ஒரு பயிற்சியா ??

சாது :

இது தான் தயவுடன் கூடிய அதி அற்புதமான சன்மார்க்க வாழ்க்கை முறை

இப்படி வாழ்ந்தால் அருள் – ஞான சித்தி மரணமிலாப்பெருவாழ்வு எல்லாம் கிட்டும்

வெளி நபர் :

ஒரே பயனுள்ள பயிற்சி – மூச்சுப்பயிற்சி தான்

ஏன் அதை சிவ வாசி யோகம் நு பேர் ??

ஸாது :

 எல்லாரும் வாசி யோகம் செய்றாங்க – நாம வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் சிவ வாசினு பேர் வச்சிருக்கோம்

வெளி நபர் :

அப்போ வாசி பார்க்கறது சொல்லித்தர மாட்டீங்களா ??

ஸாது :

அது எப்படினு எங்களுக்கே தெரியாதே சாமி  எப்படி சொல்லித்தருவது ??

ஜீவகாருண்ணியம் அன்னதானம் தான் பிரதானம் – மத்ததெலாம் உப்புக்கு சப்பாணி மாதிரி

ஏன்னா அதை வச்சி தான்  வசூல் செஞ்சி எங்க வாழ்க்கை ஓட்றோம் – அதைய  நிப்பாட்டியாச்சினா  , நாங்க எலாம் நடுத்தெருவுக்கு வந்துருவோம்ல

அதான் இந்த மாதிரி வாழ்வியல் பயிற்சி கத்துத்தர்றோம்

இந்த மாதிரி மத்த உயிர்க்காக  வாழும் போது , உங்க உயிர் உருகி , அருள் கிடைக்கும்

வெளி நபர் :

சிரித்துக்கொள்கிறார்

எப்படி இருக்கு சன்மார்க்கம் ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s