ஞான போதினி

ஞான போதினி வலை வீசினால் சில சமயம்  பறவைகள் மீன்கள் மான்கள் சிக்கும் சில சமயம் சிக்காமலும் போகும் ஆனால்  வலை வீசத்தெரிந்து வீசினால் ஒரு போதும் 5 இந்திரிய மீன்கள் சிக்காமல் தப்பாது வித்தை விஷயம் தெரிந்தவரிடம் கற்க வேணும் வெங்கடேஷ் 9600786642

வாசி எப்போது சிக்கும் ??

வாசி எப்போது சிக்கும் ?? திருவடி பயிற்சியால் கேவல கும்பகம் அனுபவம் வந்து அதன் பயனால் ஊதுதல் இயற்கையாக  நடந்தால் வாசல் திறந்தால்  வாசி அகப்படும் இதை விட்டு குயில் கூத்து  மயில் கூத்து ஆனந்தக் கூத்து அம்பலக்கூத்து என்றிருந்தால் ஒரு அனுபவமும் வராது வெங்கடேஷ் 9600786642

சாதகரும் சாத்தியரும்

சாதகரும் சாத்தியரும் சாதகர் தவம் செய்பவர் சாத்தியர் அதை பழக்கமாக்கி கொண்டவர் அவர் சதா காலமும் 24*7  அதிலேயே மூழ்கி லயித்திருப்பவர் விந்து பரவிந்து ஆக மாறுதோ ?? சுவாசம் வாசி ஆக மாறுதோ ??  விந்து அமுதமாக மாறுதோ ?? அவ்வாறே தான் சாதனமும் பழக்கமாகணும் நம் வாழ்வில் துன்பம் துயரம் சில காலம்  நீடித்தால் தாங்கிக் கொள்கிறோம் அதுவே ஒரு அங்கமாகிவிட்டால் அது பழக்கமாகிவிடுதல் போல் தான் தவமும் சாதனமும் பழக்கம் ஆதல் வெங்கடேஷ்…

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 அமுதம் உற்பத்தியாகும் வகை ஏறுமே மூலக்கனல் மேலேவாசி    இரண்டொன்றாய்க் கூடியது  நடுவேனின்று மீறுமே முடிச்செலும்பை பத்தி நின்று மேனியெல்லாம் ஓடாது நடுவேயோடும் வாறுமே மேலேழும்பி நினைவைமேலே வாய்பொத்தி அச்சமயம் பிடரியேறும் சீறுமே மேலேறத் தள்ளும்பின்னால் திரும்பாமல் நாக்கின் வழிசாருந்தானே பொருள் : மூலக்கனலும் வாசியும் கலந்து  நடுவே நின்று , உடலெல்லாம் ஓடாமல் – மேலேறும் . நடு  நெற்றி சேரும் அப்போது நினைப்பை மேல் வைத்து…

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 சுழுமுனை பெருமை காணலா மெத்தனையோ கோடாகோடி கண்ணுக்குள்ளே தெரியும் கிருஷ்ணனைப்போல் தோணலா மெதிர்நிற்கும் பாவனைபோல் துயரெல்லா மாற்றிவிடும் சுழிமுனை வாசல் வீணல்லால் மற்றொன்றில் காண்பதுண்டோ மிஞ்சினவர் சொல்கேட்ட வித்தை போல் நாணில்லா வில்லெறிந்த வீரன் போல் நாமறியத் தன்மை விட்டு  நாடினாலே பொருள் : உச்சி திறந்தால் , அதினுளே கோடானு கோடி அண்டங்கள் – அகிலாண்டங்கள்  பிரம்மாண்டமாய் காணலாகும் அதுக்கு துன்பம் துயர் நீக்கும் அற்புத சக்தி…

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 பத்தாம் வாசல் பெருமை தெருவென்ப தெதுவென்றால் பத்தாம்வாசல் சிறுவாசல் புருவனடு அறிவின்வாசல் குருவென்றால் அவ்வாசல் திருவாம்வாசல் கொடுங்கோபம் அகற்றும் சமாதிவாசல் கருவென்றால் நினைவிருக்கும் முத்திவாசல் கணக்கறிந்து ஏறுவீரோ ஞானவீடு இருவென்றால் வாராதே இருந்துபார்ப்பீர் இத்தனைக்கும் காரணமே நெத்திவாசல் பொருள்: 10ஆம்  வாசலுக்கு என்னென்ன பேர் வைத்து அழைக்கிறார் சிறுவாசல் அறிவு வாசல் திரு வாசல் புருவ நடு  சமாதி வாசல் ஞான வீடு நெத்தி வாசல் இதுக்கு ஏறினோர்…