கமலக்கண்ணன்  ஐயா –  குறிப்பு

கமலக்கண்ணன்  ஐயா –  குறிப்பு

இவர் 85 + வயதிருக்கும் ஆன்மீகப்  பெரியார் ( ஈ வெ ரா அல்ல ) 

காஞ்சியில் அரசுப் பணி  இருந்து ஓய்வு பெற்றவர்

பல நூல்களை வெளியிட்டவர் – சுமார் 45

பல ஆய்வுகள் மேற்கொண்டு பிரசுரித்து , அதனால் சன்மார்க்க அன்பரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர்

இவர் நூல்  – ஞானக்கனல் எனும் நூல் நான் முதன் முதலில் படித்த நூலாகும்

இவருடன் எனக்கு 2015 ஆம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டது 

அவர் தன் பத்திரிக்கைகள் பிரதி அனுப்பி  வைத்தார் கோவைக்கு

அதில் ஆய்வுக்கட்டுரைகள் இருந்தன

அதில் வள்ளல் பெருமான் திருமணம் முடித்து இல்லறம்  நடத்தி , அவர் மனைவி இறந்தவுடன் அவர்க்கு சமாதி வைத்ததாகவும் , அந்த சமாதி மீது அமர்ந்து இருந்ததாகவும் என எல்லாம் எழுதி இருக்கார்

அவர் இல்லறத்தில் சில பிரச்னைகள் இருந்ததாகவும் , வருமானம் இல்லா வாழ்வு என பலப்பல 

இது சன்மார்க்க உலகில்    பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது

இவரை கண்டித்தனர்

அவர் : வள்ளலார் சாதாரண மானிடராக இருந்து தான் இவ்ளோ பெரிய ஞானி – உயர்ந்த ( ஞான தேகம் ) அடைந்தார்

அப்போது எனக்கு சிறிது அறிவு இருந்தது – இப்போது அண்டங்கள் எலாம் கடந்து விளங்குது  என ஆதாரம் காட்டினார்

வானத்தில் இருந்து குதித்திடவிலை என்றார்

அவர் ஒத்துக்கொள்வதாயிலை

பின் : நம் சன் கிளிகள்  “ வள்ளலார் கூறும் சிவத்தை அறிவது “  எப்படி ??

அவர் வேறு சமய மத சிவம் வேறு என்றார்

க கண்ணன் : ஆறாம் திருமுறையில் எத்தனை இடங்களில் நடராஜர் பத்தி பாடியிருக்கார்

அவர் அந்த எண்ணிக்கை கூட வெளிப்படுத்தினார் 

அவர் எந்த சமய மத தெய்வம் என கேள்வி கேட்டார்??

ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சியில் – உள்ளே சென்று நடராஜரைக்கண்டேன்  என தான் பாடியுள்ளார்

அவர் வேறு இவர் வேறா ??

நம் சன் சங்கங்கள் ஒத்துக்கொள்ளவிலை

அவர்க்கு ஏதோ  உலகில் யாரும் கடைபிடிக்காத மார்க்கம் நெறியில் இருப்பதாக நினைப்பு

அதான் இவர்கள்  யாரையும் மதிப்பதில்லை – சித்தர் உட்பட  

1 யார் யாரெலாம் சன்மார்க்கம் வைத்து வசூல் செய்து , அன்னதானம் செய்து , மீதியில்    பிழைப்பு நடத்தறாரோ ??

2 அப்பாவி மக்கள் ஏமாத்தி அவர் காசில் வெளி நாடு சென்று தவறான விளக்கம் அளித்து அவரை திசை திருப்புகிறாரோ ??    

3 மக்களை சோறு போடுதலில் வைத்து , தவம் சாதனம் என திருப்பாமல் இருக்காரோ ??

அவர்க்கெல்லாம்  நல்ல முடிவு இறுதி சாவு வராது

இது என் சாபம் – நடந்தே தீரும்

 அவரை பத்திரிக்கை வெளியீட்டை நிறுத்த சொன்னார் – மறுக்கவே ,  கொலை மிரட்டல் விடுத்து  நிப்பாட்டச் செய்தார் 

சன்மார்க்கம் கொலை செயும் அளவுக்கு இறங்கிவிட்டது

 க கண்ணன் ஐயா தான் தன் ஆராய்ச்சியின் முடிவாக வள்ளல் பெருமான் தவம் செய்து இந்த பெறற்கரிய நிலை அடைந்தார் எனவும் – சங்கங்கள் எலாம் சோறு போடத் தான் தெரியும் என சாடினார்   

அதுக்கு ஆதாரமாக  இறையருளாளர் வள்ளலார் வாழ்வும் வாக்கும் என்ற நூல் வெளியிட்டு , அதில் அவர் வடலூர் அருகே மலையில் அவர் சிலை – “  தவ நிலையில் – அரைக்கண் பார்வையில் “ கண்டெடுத்து , அவர் தம் சீடர்க்கு ஞானோபதேசம் செய்த செய்தியையும் வெளிப்படுத்தினார்

ஆனால் நம் சங்கங்கள் இவரை ஒதுக்கி வைத்திருக்கு ஏற்பதில்லை

அது சன் அன்பர் செய்த கர்ம வினை – தீ வினை

வெங்கடேஷ்

9600786642

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s