இதுவும் அதுவும் ஒன்றே
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
சுழுமுனை பெருமை
யோகமுற்ற யோகசித்தி யோகமார்க்கம்
யோகமுறை யோகவழி யோகதீச்சை
தாகமுறை நாமுறையே கூறீரையா
தானறிய சொல்லிடுவீர் சாந்திசாந்தி
ஊகமுறை யோகமிது வாசல்பூட்டு
உட்புகுந்து மனதுயிரை ஊடுவாசல்
ஆகவுரை நீட்டிமுனை வாசல்கூட்டு
அய்யய்யா தீபவொளி அருட்சோதி
பொருள் :
யோகம் கூறும்
யோகசித்தி
யோகமார்க்கம்
யோகமுறை
யோகவழி
யோகதீச்சை
எலாம் என்னெனில் ?
வாசல் திறந்து , அதனுள் புகுந்து உச்சிமுனை அடைந்து தீபம் அருட்ஜோதி காண்பது தான் என ஒரு பாடலில் ஞானம் அடையும் வழி கூறி முடித்துவிட்டார் சித்தர்
இதுக்கு பல ஆண்டுகள் / பிறவி தவம் தயவு ஒழுக்கம் எல்லாம் தேவை
இதைத் தான் நம் சினிமா பாடலில் – 3 நிமிடத்தில் கதா நாயகன் ஒரு பாட்டு பாடியே கோடீஸ்வரன் ஆகுதல்
அதில் பல்லாண்டு உழைப்பு அர்ப்பணிப்பு ஈடுபாடு ஆர்வம் எல்லாம் அடங்கியிருக்கு
ரெண்டும் ஒன்று தான்
வெங்கடேஷ்
9600786642