காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 சேருவீர் சுழிமுனையாம் தெருவின்வாசல் சிக்கறுத்து உச்சிவழி சிறந்தவாசல் போருநீர் போடுவீர் புருவவாசல் பூட்டிருக்கு மேடையது வலுவுமெத்த காருநீ நெஞ்சிருக்கும் பிராணன்தானே கதவையும் திறந்துவிடும் போவீருள்ளே நீருமே மெய்ப்புருவத் தமர்க்குள்ளேகி நினைவையுமே அதிலிட்டு தூண்டுவீரே பொருள் : சுழிமுனை வாசல் என்பது மேடை போல் அதுக்கு பூட்டிருக்கு அதைத் திறந்து உள்ளே செல்வீர் உச்சி வாசல் அடைவீர் – அது சிறந்த வாசல் அது நெஞ்சமெனும் பிராண நிலையம் ஆம்…