நதியும் சாமியாரும்

நதியும் சாமியாரும்  நதியின் தோற்றம் ஆரம்பம் சுனை போல் சாமியாரின் ஆரம்ப ஆட்டம் மரத்தடியில் ஜோசியம் – குறி சொல்லுதல் விபூதி எல்லாம்  நதி அகண்ட காவிரியாக உருவெடுப்பது போல் தான் வசூல் செய்து  பெரிய கோவில் கட்டி பெரிய ஆளாகி – பத்ம விருது கூட வாங்கி பல பள்ளிகள் – கல்லூரிகள் ஆரம்பித்து பல மருத்துவமனைகள் பல தர்ம ஸ்தாபனங்கள் அமைத்து ஸ்திரமாக அமர்ந்து கொள்வது வெங்கடேஷ்

“ விந்து – பரவிந்து “

“ விந்து – பரவிந்து “ தங்கத்தை புடம் போடுவது போல் விந்துவையும் புடம் போட்டால் தான் ஆன்மாவுடன் கலக்க தகுதி அடைவோம் இன்றேல் – முடியாது வெங்கடேஷ்

“ வாசியும் –  விட்ட குறையும் தொட்ட குறையும் “

“ வாசியும் –  விட்ட குறையும் தொட்ட குறையும் “   உண்மை சம்பவம்  – 2021 26 வயது பொறியியல் பட்டதாரி சென்ற வாரம் , என்னிடம் தொடர்பு கொண்டு : தானாகவே திராதகம் பயிற்சி மேற்கொண்டதாகவும் , மேலும் சில பயிற்சிகள் செய்த தாகவும் கூறினார் 3 மாதம் செய்ததாக கூறினார் அதனால் , இப்போது தனக்கு வண்டு சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கு  தன்னால் வழக்கமான பணி செய்யமுடியவிலை என் செய்வது ?? எப்படி…

சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா பொழப்பு எப்படி போகுது ?? செந்தில் : எனக்கு என்ன அண்ணே கொறச்சல் ?? You Tube யூ டியூப் இருக்கற வரைக்கும் எனக்கு ஒரு கொறச்சலும் இல்ல அதன் ஆசீர்வாதத்துல மாசா மாசம் 50000 சம்பாதிக்கிறேன் அண்ணே க மணி :  எப்படி ?? செந்தில் : உரை நடை வச்சி  – அதுல வள்ளல் பெருமான் தவம் செய்றது   /சாப்பாடு சாப்பிடறது – பல் விளக்கறது –…

வாசி

வாசி தடிமனான  பஞ்சு மாதிரி பௌதீக சுவாசம் மெல்லிய நூலிழை மாதிரி வாசி பஞ்சு நூல் ஆவதுக்குள் போதும் போதும் என்றாகிவிடும் பருத்தி பட்ட பாடு பனிரெண்டு தானே ?? இதன் பொருள் அப்போது விளங்கும் வெங்கடேஷ்

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 ஆகுமே அறிவைவிட்டார் சலனத்தாள்வார் அவ்வாசி  யோகம்விட்டார் சித்திவிட்டார் போகுமே எனைவிட்டார்  சாஸ்திரம் கெட்டார் பொய்கெட்டார் மெய்யாவார் புழுக்கையாகார் ஏகுமே உயிர்விட்டார் மயானம் தொட்டார் எல்லாரும் தொட்டாரோ அச்சமில்லார் ஓகுமே கண்ணீரே  வடிதல் சொந்தம் ஊழ்வினையென் றிடிப்பாரே துடிப்பினாலே விளக்கம் : யார் அறிவின் துணையில்லாமல் இருக்காரோ அவர் மனதின் சஞ்சலத்துக்கு ஆட்படுவார் வாசி யோகத்தை விட்டால் சித்தி விட்டதுக்கு சமானம் என் நூல்கள் பாராமல் ஆயாமல் விட்டோர் சாஸ்திரம்…

அனுபவம் ஒன்றா ?? வெவ்வேறா ?? 2

அனுபவம் ஒன்றா ?? வெவ்வேறா ?? 2 ஓன்றே ஆம் உண்மை சம்பவம்  2017 ஒரு இஸ்லாமிய அன்பர் – மேட்டுப்பாளையம்  , என் வீட்டுக்கு வந்து திருவடி பயிற்சி பெற்றுச் சென்றார் ஒரு மாதம் கழித்து , தொடர்பு கொண்டு  , எனக்கு நெற்றியில் நீல ஒளி வருது , என்ன அனுபவம்  ? நல்லதா?? நல்ல நிலைக்கு வந்து விட்டேனா ?? நான் : மிக நல்ல அனுபவம் மனம் அடங்கப்போகுது வீரபத்திரர் வந்து…

சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா  போன வாரம்  சித்தர் பாட்டுக்கு – ஒரு விளக்கம் கொடுத்திருந்தே ,  இந்த வாரம் வேற விளக்கம் ?? செந்தில் : காலம் மாறிக்கிட்டே இருக்கற மாதிரி தான் இதுவும் விளக்கம் – பொருள் எல்லாம் மாறிக்கிட்டே இருக்கும் நம் உணவும் உடை விருப்பம் ரசனை எல்லாம் எப்படி , மாறிக்கிட்டே இருக்கோ  ?? அதே  மாதிரி தான் இதுவும் அதெல்லாம் கண்டுக்காதீங்க அண்ணே இன்னிக்கி ஒண்ணு சொல்லுவேன் –…

“ எட்டிரெண்டு பெருமை  “

“ எட்டிரெண்டு பெருமை  “ சித்தர் பாடல் ( எந்த சித்தர் என நினைவு வரவிலை )   “ எட்டிரெண்டு அறிந்தார்க்கு இடரில்லை குயிலே மனம் ஏகாமல் நிற்கில்  கதி எய்தும் குயிலே “ விளக்கம் : அதாவது சித்தர் பெருமான் 8 * 2 அறிந்தால் என்பது 8 = அகரம்  – ஒரு கண்  2  = உகரம்  – மறு கண் என குறிக்க வரவிலை அவர் இதன்  அனுபவத்தை அடைந்தவர்க்கு…

மணிமகுடம் – சன்மார்க்க விளக்கம்

மணிமகுடம் – சன்மார்க்க விளக்கம் மணி மகுடம் என்றால் உச்சத்தில் இருப்பது  மிக மிக உயர்ந்த நிலையில் இருப்பது என பொருள் ஆம் அரசர் அணிவது இதில் பலவித மணிகள் – நவரத்தினக்கற்கள் இருக்கும் இது  குறிப்பிடுவது – பிரணவத்தின் நவரத்தின ஒளிகள் சிரசில்  கூடி , மணியாக மாறி நிற்கும் போது – மணி மகுடமாக இருக்கு பார்க்க. இது ரத்தினஒளி ஆகிய ஆன்ம ஒளியே விந்து மணி ஆகி ,   மணிமகுடம் ஆகுது நம்…