வள்ளல் பெருமானின் ரெண்டாம் வருகை
க மணி :
என்னடா எங்கே போய்ட்டு வர்றே ??
செந்தில் :
யோகா வகுப்பில சேர்ந்துட்டு வந்தேன் – உடனே என் பேரை யோகி ஆன்ந்த பாபு நு மாத்தி வச்சிக்கிட்டேன்
க மணி :
இன்னிக்கு தானே சேந்தே ? அதுக்குள்ளயா ?
செந்தில் :
ஆமாண்ணே – எல்லாரும் தன் பேரை
சாகாவரம் பெற்ற சித்தர்
இறைவன் /கடவுள்
ஞான வெளி சித்தர்னு – ஞான பிரான் – பேர் வச்சிக்கும் போது நான் வச்சிக்கிட்டா என்னவாம் ?
எல்லாரும் ஏமாத்தும் போது , நான் ஏமாத்துனா என்ன ??
நாளைக்கு பாருங்க , நான் ரெண்டாம் வள்ளலார்னு ஊர் ஜன்ங்க கிட்ட சொல்லப்போறேன்
க மணி :
இது ரொம்ப ஓவர்டா – அடுக்காது
செந்தில் :
1 இப்ப ஒருத்தன் தன்னை மூன்றாம் சாய்பாபானு சொல்லிக்கிட்டிருக்கான்
ஊரை ஏமாத்தறான்
2 தன்னை கல்கி பகவான் னு சொல்லிக்கிட்டு ஏமாத்தலையா ??
அந்த மாதிரி தான் இதுவும்
எல்லாம் ஜனங்க நம்புவாய்ங்க
அவுக செய்றதையே – அன்னதானம் ஜீவகாருண்ணியம் தான் சன்மார்க்கத்தின் ஜீவ நாடின்னு சொல்லிட்டா போதும் – நான் ரெண்டாவது வள்ளலார் தான்
சமய மதங்களை எல்லாம் பழிக்கணும் – சித்தர்களை மதிக்க்க்கூடாது
கோவில் குளம் போக்க்கூடாது
ஒரு பொண்ணை காதல்ல ஏமாத்தறது எவ்ளோ ஈசியோ ?? அவ்ளோ ஈசி ஜனங்கள ஆன்மீகத்துல ஏமாத்தறது
இதை வச்சி எவ்ளோ பேர் பொழைப்பு நடக்குது தெரியுமா ??
க மணி : அதென்னமோ உண்மை தான்
வெங்கடேஷ்