காக புசுண்டர் பெரு நூல் காவியம்
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பொய்த்தவசி தானென்ற மனங்கொண்டு ஊர்ச்சோறுண்டு தவசியெனத் தானிருந்து குறடுபூண்டு ஊனென்ற உடல் வளர்த்து சடை நாணிட்டு உத்தமர்போ லேதாடி உவமைபூண்டு தேனென்ற மொழிபேசி காவியிட்டு தெருவெங்கும் பாடிடுவார் திவசச்சோறுக்கு மானென்ற அபிமானங் காசே கொண்டு வாய்மதங்கள் பேசுவார் தன்னைக்காணார் பொருள் : தான் என்பது மனமாக கற்பித்தும் ஊர்ச்சோறுக்கே கண் வைத்தும் உடல் வளர்த்து சடை பின்னியும் தாடி வைத்துக்கொண்டு உத்தமர் போல் வேஷமிட்டும் – பாதக்குறடு அணிந்தும் தேனொழுக…