திருவிளையாடற் புராணமும் – சிவ்வாக்கியரும் –
நீல ஒளி – Pituitary gland activation
திருவிளையாடற் புராணம் – தக்ஷன் வதம்
திருவிளையாடற் புராணத்தில் தக்ஷன் யாகம் செய்வான் – சிவத்தை ( மாப்பிள்ளை ??? ) அழைக்காமலே
இதை அழிக்க சிவம் தன் சடையிலிருந்து ஒரு ஒளியை உற்பத்தி செய்து அனுப்பி வைக்கும் – அது நீல ஒளி ஆக இருக்கும்
அவர் தான் வீரபத்திரன் ஆவார்
இவர் தக்ஷனை கொன்று விட, அவன் உடலில் பின் ஆட்டுத் தலை வைக்கப்படும்
ஏன் இந்த ஆட்டுத் தலை ??
அந்த ஆட்டின் கண் அசையாது
இந்த தக்ஷன் வதம் சொல்ல வருவது என்னவெனில் –
உண்மையில் இது அசைவு ஒழித்தலைக் குறிப்பதாகும்
தக்ஷன் = நான் என்ற கர்வம் – திமிர் – அகங்காரம் ஆகும்
இதை நம்மால் சாமானியரால் வெல்ல – அழிக்க முடியாது – சாதனத்தால் இந்த வீரபத்திரர் என்னும் ஒளியை நெற்றியில் உண்டாக்கி, அதன் மூலம் அசைவை ஒ ழிக்க முடியும் என்பதை உணர்த்தத் தான் இந்த புராணக் கதை
இந்த அசைவு ஒழிந்தால் , மனம் அமைதி அடைந்துவிடும்
தவம் நிட்டை கைகூடும்
இந்த மாபெரும் உண்மை அனுபவத்தை உணர்த்தத்தான் இந்த புராணக்கதை
அதனால் இதிகாச புராணம் எலாம் வெறும் கட்டுக் கதை அல்ல
இதை சிவவாக்கியர் தன் பாடலில் :
நெற்றியிலே தயங்குகின்ற நீல மாவிளக்கினை
உற்று உணர்ந்து பாரடா
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர்
அத்தலத்து இருந்த பேர்கள்
அவர் எனக்கு நாதரே
இது மனதை சாந்தப்படுத்தும் அமைதிப்படுத்தும் ஒளி ஆகும்
இந்த நீல ஒளி பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கமாகும் – அது மனதின் அசைவை ஒழித்து மனதுக்கு அமைதி சாந்தி அளிக்கும்
என் அனுபவமும் ஆகும்
அதனால் தான் நாம் , நம் வீட்டு படுக்கை அறையில் இரவில் நீல ஒளி பல்பு எரிய விட்டு படுக்கிறோம்
அது மனதை அமைதிப்படுத்தி நிம்மதியான உறக்கம் அளிக்கும் என்பதால்
எப்படி மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் சம்பந்தம் வருது ?? பாருங்கள்
வெங்கடேஷ்
9600786642