வினைகள் எப்படி வேலை செய்கின்றன  ??

வினைகள் எப்படி வேலை செய்கின்றன  ?? அது கடன் அடைக்கிற மாதிரி அது தீர்க்காமல் மேலே போக முடியாதபடி பார்த்துக்கொளும் வேலைக்கு செல்ல ஊருக்கு செல்ல தயாராய் இருக்கும் போது மலம் கழிக்க வேண்டும் என்ற நிலை வந்தால் எப்படி அதை முடிக்காமல் போக முடியாதோ ?? அந்த  மாதிரி தான் வினைகளும் அதை அனுபவித்து தீர்த்த பின் தான் அது நம்மை விடும் நம்மை விட்டு நீங்கும் வினைக்கடன் வெங்கடேஷ்

கவிகள் பாதி  ஞானியர்

கவிகள் பாதி  ஞானியர் கவிகள் : “  ஓரிடம் பார்த்த விழி – வேறிடம் பார்ப்பதிலை “ ஞானியர் : “ ஆறிடம்  பார்த்தார் – வேறிடம்  நோக்கார் “ வெங்கடேஷ்

பலம் எங்கே இருக்கு ??

பலம் எங்கே இருக்கு ?? மனம் சம நிலையில் இல்லாதிருந்தால் அதுக்கு பலம் அதிகம் ஒரு பக்கம் சாய்ந்து இருந்தால் அதுக்கு பலம் அதை  சமப்படுத்திவிட்டால் அது பலம் இழந்துவிடும் அதன் இரகசியம் நிகழ் காலத்தில் இருக்கிறது நிகழ் காலத்தில் மனம் செயல்படாது அப்போது நாம் பலம் அடைவோம் மனம் பலம் குன்றும் வெங்கடேஷ்