மந்திரச் சொல்

மந்திரச் சொல் 1 “ கடமை கண்ணியம் கட்டுப்பாடு “ இதை யார்  உரைப்பது ?? இதெல்லாம்  சற்றும் இல்லாத அரசியல் தலைவரும் அவர் தம் உடன் பிறப்புக்களும்  நல்ல நகைச்சுவை வேடிக்கை இலையா ??  2 ஆன்ம சாதகனுக்கோ  : “ பார்வை மனம் பிராணன் “ இம்மூன்றில் தான் அவன் வாழ்வே தவ வாழ்வே  அடக்கம் வெங்கடேஷ்

வினைகள் எப்படி வேலை செய்கின்றன  ??

வினைகள் எப்படி வேலை செய்கின்றன  ?? அது கடன் அடைக்கிற மாதிரி அது தீர்க்காமல் மேலே போக முடியாதபடி பார்த்துக்கொளும் வேலைக்கு செல்ல ஊருக்கு செல்ல தயாராய் இருக்கும் போது மலம் கழிக்க வேண்டும் என்ற நிலை வந்தால் எப்படி அதை முடிக்காமல் போக முடியாதோ ?? அந்த  மாதிரி தான் வினைகளும் அதை அனுபவித்து தீர்த்த பின் தான் அது நம்மை விடும் நம்மை விட்டு நீங்கும் வினைக்கடன் வெங்கடேஷ்

கவிகள் பாதி  ஞானியர்

கவிகள் பாதி  ஞானியர் கவிகள் : “  ஓரிடம் பார்த்த விழி – வேறிடம் பார்ப்பதிலை “ ஞானியர் : “ ஆறிடம்  பார்த்தார் – வேறிடம்  நோக்கார் “ வெங்கடேஷ்

பலம் எங்கே இருக்கு ??

பலம் எங்கே இருக்கு ?? மனம் சம நிலையில் இல்லாதிருந்தால் அதுக்கு பலம் அதிகம் ஒரு பக்கம் சாய்ந்து இருந்தால் அதுக்கு பலம் அதை  சமப்படுத்திவிட்டால் அது பலம் இழந்துவிடும் அதன் இரகசியம் நிகழ் காலத்தில் இருக்கிறது நிகழ் காலத்தில் மனம் செயல்படாது அப்போது நாம் பலம் அடைவோம் மனம் பலம் குன்றும் வெங்கடேஷ்

நிழலும் நிஜமும்

நிழலும் நிஜமும் எய்தவன் இருக்க அம்பை  நோவது ஒக்கும் நிஜம் ஓரிடத்தில் அமைதியாக   இருக்க நிழலை அடிப்பது தாக்குவது மாதிரி தான் புறக் கண்ணில்வினைத் திரை மாயா மலத்திரை   நீக்க தவம் செய்வதும் மலங்கள் இருப்பிடம் வேறு இவர் தாக்கும் இடம் வேறு எங்கே  சாதனம்  தவம் பலிக்கும் ?? வெங்கடேஷ்

அகமும் புறமும்

அகமும் புறமும் புறத்தே சாலையில் பராக்கு பார்த்தபடி வண்டி ஓட்டினால் விபத்தால் மரணம் நிகழும் அதே கதை தான் புலன்களை  வெளியே பராக்கு பார்க்கவிட்டால் இறுதியில் மரணம் தான் வந்து சேரும் ரெண்டிலும்  அதே கதி  தான் அதுவும் அதோ கதி தான் வெங்கடேஷ்

“ கண்மணி பெருமை “  

“ கண்மணி பெருமை “   மை இடும் கண்ணினால் ஒருமை வரும் அது வெறுமை உண்டாக்கும் அதனால் எல்லா எண்ணமும் ஈடேறும்  வல்லமை பெறுவோம் வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு விந்து பரவிந்து ரெண்டையும் மறுக்க வந்தது சுத்த விந்து போல் சிவம் பரசிவம் ரெண்டையும்  மறுக்க வந்தது சுத்த சிவம் போல் இருமை மறுக்க வந்தது  ஒருமை அசைவு ஒழிக்க வந்தது  திருவடி வெங்கடேஷ்