இடைச்செருகல் – திருமந்திரம் – அருட்பா
1 திருமந்திரம் மொத்தம் எண்ணாயிரம் என்கின்றார் வள்ளலார்
ஆனால் நமக்கு கிடைத்ததோ மூவாயிரம் மட்டும்
இந்த மூவாயிரம் பாடலுக்கு சான்றாக ஒரு பாடலும் உள்ளது
மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
மூலன் உரை செய்த முந்நூறு மந்திரம்.
மூலன் உரை செய்த முப்பது உபதேசம்
மூலன் உரை செய்த மூன்றும் ஒன்றாமே
இது இடைச்செருகல் ஆக இருக்கக் கூடும் – அவர் எழுதியிருக்க மாட்டார்
வள்ளல் பெருமான் வாக்கு தப்பாகாது
2 அருட்பா
அதே மாதிரி அருட்பாவிலும்
தனிப்பாடலாக அமையப்பெற்றதாகும்
அருள் ஜோதி பத்திரிக்கை 2013 ஆண்டு
“ பழையன கழிக்க “
முன்னாள்னான் மதவழியில் மூழ்கியிருந்த நாளில்
முழங்கிய பாக்களையெல்லாம்
முதல் ஐந்துதிருமுறையாய் ஒதுக்கியுள்ளேன் – அவற்றை
முழுமையாய் ஒதுக்கிவிடுங்கள்
அன்னாளில் அத்துணை அற்ப அறிவாயிருந்தேன்
அதனால்கோவில் சிலைகளை
ஆண்டவனெனயெண்ணி அவை மேலே பாடினேன்
அருள் பெரிதும் அடைந்திலேன்
இன்னாளில் இறையுணர்ந்த இயற்கை இரக்கமே
இறைவனென அறிந்து கொண்டனன்
இயற்கையையே பாடினேன் – அதையே கூடினேன்
இரக்கமே புரிந்து வந்தனன்
என்னாளும் இறவாத இயற்கை யாக்கை பெற்றேன்
இவ்வுண்மை அறிகென்றனை
இருளெலாம் ஒழிந்திட அருளெல்லாம் பொழிந்திட
இறையே வடலூர்ச் சோதியே
இது வள்ளல் பெருமான் எழுதி இருக்க மாட்டார்
அவர் தம் சொற்கள் இப்படி இருக்காது
அதனால் – யாரோ தவம் செய முடியாதவர் – வழி துறை முறை தெரியாதவர் , இந்த மாதிரி ஒரு கேவலமான பா எழுதி செருகி , சன்மார்க்க சங்க அன்பரை திசை திருப்பு இருக்க்கூடும்
ஒரு அரைவேக்காடு எழுதி செருகிவிட்டது
இதெல்லாம் மறைப்பின் விளையாட்டு
வெங்கடேஷ்