“ போகர் – Lao Tzu – Eckhart Tolle  “

“ போகர் – Lao Tzu – Eckhart Tolle  “

Eckhart Tolle – ஒரு சிறு குறிப்பு

இவர் பற்றி எழுதியே ஆக வேண்டி இதை எழுதுகின்றேன்

Eckhart Tolle – ET என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு சிறந்த மேலை நாட்டு தத்துவ ஞானி ஆவார்

இவர் தன் ஊரிலேயே தங்கி இருக்க முடியாத அளவுக்கு உலகம் சுற்றி ” நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி ” என்று பாடம் சொல்லிக்கொடுக்கின்றார் – ” How to Live in the Present ”

இவர் எழுதியுள்ள ஆங்கில நூலகள் எல்லாம் அற்புதமாக இருக்கும்

அதில் நான் படித்தவை –
1 Power of NOW – 2010 ல் படித்தேன்

2 Stillness Speaks

3 The New Earth

1 Power of NOW படித்த போது , நான் அதிர்ந்து விட்டேன்
நான் செய்துகொண்டிரூக்கும் சாதனம் அப்படியே இவரும் கூறியிருந்தார்

அவர் என்ன கூறுகின்றார் எனில் :

” Compassion will rise when two Opposites join – positive + and negative -”

அதாவது ” Compassion – Empathy – ஜீவகாருண்ணியம் – தயவு எப்போது ஒரு சாதகனுக்கு வருமெனில் – ரெண்டு எதிர் எதிர்கள் –
ரெண்டு எதிர்மறைகள் சந்தித்துக்கொண்டால் வரும் ”
இது 100 /100 உண்மை

நான் இதைத் தான் செய்துகொண்டிருக்கின்றேன் – இரு கண்கள் +/ _ சேர்க்கின்ற பயிற்சி – இது தயவு உண்டுபண்ணும்
ஆன்ம நிலைக்கு கூட்டிச் செல்லும்

உலகில் ஞானிகள் கருத்து ஒற்றுமையுடன் தான் இருப்பார்கள் – வேறுபடமாட்டார்கள்

இவர் Tao – Te Ching என்ற 3000 ஆண்டு  பழைமை வாய்ந்த சீன நூல் அடைப்படையாகக் கொண்டு படித்து , கற்று , மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கின்றார்

இந்த நூல் என் வாழ்க்கையை மாற்றி அமைத்த பல நூல்களில் ஒன்றாகும்

நீங்களும் படித்துப் பாருங்கள்

என் வலையில் 1008petallotus.wordpress.comல் இவர் நூலின் கருத்துச் சுருக்கங்கள் Excerpts/synopsis உள்ளன – விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம்

Tao – Te Ching என்ற சீன நூலை எழுதியவர் லா வோட்சு Lao Tzu ஆவார்

இவர் யார் எனில் ?

இவர் நம் த நாட்டு  போகர் சித்தர்  ஆவார் – அப்படி தான் என நம்பிக்கை  நிலவுது

இவர் தான் சீனாவுக்கு சென்று அங்கு தங்கி அந்த நாட்டு மொழியில் பல நூல்கள் எழுதி ஞானம் போதித்தார்

அந்த நூலை வைத்து  உலகெங்கும் ஞானம் – நிகழ் காலத்தில் வாழ்தல் என  கற்பித்துவருகிறார் ET

ஆக  உலகெங்கும் ஞான ஒளி பரப்புவது நம் தமிழும் – தமிழ் சித்தர்கள் தான்

  

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s