அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம்

உண்மை  சம்பவம்  –  கோவை 2021

ஒருவர் எனக்கு அலைபேசியில் அழைத்து பேசியது

அவர் :

நீங்கள் எல்லாம் பத்தி பதிவு போடுகிறீர்கள் – எல்லா பதிவுகளும்

 அருமை

எல்லா சித்தர் பாடல்களுக்கும் விளக்கம் அளிக்கிறீர்கள்  

எந்த குழு ??

சாலையா ?? மன வளக்கலையா ?? சித்த வித்தையா ??

 நான் :

இல்லை – இதெல்லாம் இல்லை – நான் சன்மார்க்கம்

அவர் :

 பின் எப்படி எல்லார் பத்தி  பதிவு ??

நான்  :

அவர் /அது  பத்தி தெரியும் – அதனால் 

அவர் :

ஆனாலும் மிக தைரியமாக சித்த வித்தை/ வாசி ( பாடும் சித்தர்  ) / மன வளக்கலை    பத்தி விமர்சனம் செய்கிறீர்கள்

வாழ்த்துக்கள்

உங்கள் பணி தொடரட்டும்

சரி இதெல்லாம் சரியிலை எனில் ?? உங்கள் முறை  என்ன / எப்படி ??

அது மட்டும் சரி என  எப்படி  கொள்வது ??

நான் :

இதில் எல்லாம் மெய்ப்பொருள் – திருவடி இல்லை – அதனால் அனுபவம் வருவது இல்லை

அப்படி இருந்தாலும் அதை சரியாக பயன்படுத்தத்  தெரியவிலை – அதனால் வித்தை  சரியிலை – பயன் தரவிலை 

தவத்தில் மெய்ப்பொருள் பயன்படுத்தினால் , அனுபவம் வருவது சர்வ நிச்சயம் உறுதி ஆம்

அவர் :

ரகசியங்களை  – பரிபாஷைகள் எல்லாம் உடைத்து சொல்லிக்கொண்டே வருகிறீர்களே ?? இது தப்பு இலையா ??

நான் :

எவ்வளவு நாளுக்கு தான் மறைத்து வருவது .

வள்ளலார் 90% உண்மை வெளிப்படுத்திவிட்டார் 

அதில் நானும் எனக்கு  தெரிந்த  சில /பல ரகசியப் பொருள் கூறுகிறேன்.    ஆனால் எல்லாம் கூறிவிடவிலை

ஒரு 10% மறைத்து வைத்துள்ளேன்

1 பொற்சபை – சிற்சபை விளக்கம்

2 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்

3 எட்டிரெண்டு

4 திருவடி தவ  முறை

இது மாதிரி  பல விளக்கங்களை நான் முக நூலில் / என் வலையில்  வெளிப்பட உரைக்கவிலை

யார் விரும்பி கேட்டு , பயிற்சி    எடுக்கிறாரோ அவர்க்கு கற்றுத்தருகிறேன்

அவர் :

நீங்கள்  ஆசிரமம் நடத்துகிறீரா?? எங்கே இருக்கு ??

நான் :

அய்யய்யோ  – அப்படி ஆசிரமம் எல்லாமிலை  – நான் குடும்பஸ்தன் .

நான் சொந்த தொழில் செய்கிறேன்  – என் வீடு கோவை

கூட தவம் செய்கிறேன் – கிடைக்கும் அனுபவத்தை பதிவாக போடுகிறேன் – மக்கள் அறிந்து கொள்ள வேண்டி

அதை படித்து , ஆர்வமிருப்பவர் வந்து  கேட்டால் , கற்றுத்தருகிறேன் அவ்ளோ தான்

வீடு – குடும்பம்  – தொழில் – தவம் என என் வாழ்க்கை ஓடுது

வீட்டில் தான் வருபவர்க்கு கற்றுத்தருகிறேன்

அவர் :

எத்தனை பேர் கற்றுளார் ?

நான் :

சுமார் 300 பேர் – இந்தியா  / வெளி நாடு உட்பட

அவர் :

உங்கள் குரு யார் ? எங்கு கற்றீர் ??

 நான் :

காஞ்சியில்  ஒரு குரு திருவடி பயிற்சி அளித்தார்

பின் நானே அதை இன்னும் ஆய்ந்து –

நெற்றிக்கண் திறப்பு – ஒளி தேகம் வரை  பயிற்சிக்கான வழிமுறைகளை திருவாசகத்திலிருந்து கண்டெடுத்தேன்

அவர் :

அதில் அவ்ளோ விஷயம் இருக்கா ??

நான் :

எல்லாரும் அதை  பாராயண / முற்றோதல் நூலாக பார்க்கின்றார்  

நான் அதை ஞானப்பெட்டகமாக பாவித்து அதில் இருந்து எல்லா பயிற்சி முறை எடுத்தேன்

அது கூறா விஷயம் இல்லை

சன்மார்க்கத்துக்கு தேவையான எல்லாம் அதில் உள்ளது

அவர் :

நானும் வந்து கற்றுக்கொள்கிறேன்

கொரோனா அலை ஓயட்டும்

 நான் : சரி  வாருங்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s