சிற்றம்பல வாசல் பெருமை – ஞானியர் ஒற்றுமை
சிவவாக்கியர்
1 சாவதென்று சொல்வதும் பொய் சாவதும் பொய்ச்சர்வமும்
ஆவதென்று சொல்வதும் பொய் ஆவதும் அழிவதும் பொய்
காவலிட்ட மேலை வாசல் கால் கடந்த ஞானிகட்கு
ஆவில் ஏறும் ஈசனன்றி யாருமிலை என்பதே திருவாரூரனே
மேலை வாசல் = சிற்றம்பல வாசல்
2 நல்ல வாசலைத் திறந்து நாத வாசல் ஊடு போய்
எல்லை வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதிலையே
எல்லை வாசல் = சிற்றம்பல வாசல்
3 அருட்பா – ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகளில்
அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
அன்பொடு கண்டேன டி – அம்மா
அன்பொடு கண்டேன டி. ஆணி
- அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
அம்மை இருந்தாள டி – அம்மா
அம்மை இருந்தாள டி. ஆணி - 31. அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேன டி – அம்மா
அமுதமும் உண்டேன டி. ஆணி - 32. தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
சந்நிதி கண்டேன டி – அம்மா
சந்நிதி கண்டேன டி. ஆணி - 33. சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
சாமி அறிவார டி – அம்மா
சாமி அறிவார டி. - 34. ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி – அம்மா
அற்புதக் காட்சிய டி.
வள்ளல் பெருமானின் சிற்றம்பல அனுபவம் இது
இது ஞானியர் ஒற்றுமை
வெங்கடேஷ்