“ பிரம்ம ரேகை – தலை எழுத்து “
இதை சொர்ண ரேகை என்றும் கூறுவர்
இது எங்கிருக்கு ??
நம் தலையில் தான் – மூளையில் தான்
பல்லாண்டுக்கு முன் , நான் அகத்தியர் பாடல் படித்துக்கொண்டிருந்த போது , ஒரு குறிப்பு அதில் தலை எழுத்து என்பது , மூளையின் நடுப்பகுதியில் ஒரு சிறு கோடு மாதிரி இருக்கும் என வந்தது
மேலும் இதை உறுதி செயும் வகையில் , கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவில் அமைப்பும் உடையதாய் விளங்குது
“ மூலஸ்தானத்தின் நடுவில் சதுரமேடை… அதில் வட்டமான பீடம்… இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் ”” சொர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம் “ என்பர்.
இது ஆன்ம பீடத்தில் இருக்கும் தலை எழுத்து
சொர்ண ரேகை தான் பிரம்மா எழுதிய தலை எழுத்து
நம் முன்னோர் எவ்வளவு அறிவாளிகள் ??
அக அனுபவத்தை எப்படி எலாம் புறத்திலே வெளிப்படுத்தியுள்ளனர் பாருங்கள்
அவர்க்கு ஈடிணை இலை
வெங்கடேஷ்