பஞ்சாட்சரம்
ஸ்தூலம் – சூக்குமம் – காரணம் என எல்லா வகைகள் உள
ஸ்தூலம் :
“ நமசிவய “
இது நம் உடலில் செயல்படும் பஞ்சேந்திரிய ஒளிகள் குறிப்பிடுது
அவைகள் வரிசை கிரமத்தில் வைக்கப்பட்டுள்ளன
அவைகள் ஓங்காரத்துடன் பிணைக்க வேணும் என்ற பொருளில் வழங்கி வருது
அப்போது ஓம் நமசிவய ஆகிவிடுது
இது வெறும் வாயால் உரைத்தால் நடக்காது
தவத்தால் மட்டுமே சாத்தியம்
சூக்குமம் :
“ சிவயநம “
இதில் சி ஆகிய ஒளியையும் , வ ஆகிய காற்றையும் ஒன்றாக சேர்த்து , ய ஆகிய 10 ம் வாசலுக்கு ஏற்ற வேணும் என வலியுறுத்துது
அதுக்காகத் தான் சிவ முதலில் வைத்து , பின் “ ய “ வைத்துள்ளனர்
இதில் வாசி யோகம் அடங்கிவிடும்
அது சமய மதம் கூறும் வாசி பயிற்சி ஆகும்
இதுவும் வெறும் வாயால் உரைத்தால் நடக்காது
தவத்தால் மட்டுமே சாத்தியம்
தவத்தால் மட்டுமே சாத்தியம் என சமயம் ஒப்புக்கொண்டாலும் , அதை மக்கள் தங்கள் வசதிக்கேற்ப மாத்திக்கொண்டு , வெறும் சடங்காக்கி விட்டார்
வெங்கடேஷ்