தெளிவு

தெளிவு எப்படி கஞ்சா கள் அபின் போதையோ ?? அப்படித் தான் சுத்தம் – மௌனம் ஆனந்தம் – அமைதியும் போதை தான் அடிமையாகி விட்டால் – பழக்கமாகிவிட்டால்  வெளி வர விரும்பார் வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே அத்திவரதரும் –  கோகர்ண மகாபலேஷ்வர்   முன்னவர் காஞ்சியில்  – சிலை ரூபம் பின்னவர் கர்நாடகத்தில் – லிங்க ரூபம்  இருவரும்   நீரில் தான் மூழ்கி இருக்கார் ஆழமான  நீர் நிலையில் வைக்கப்பட்டுள்ளார் எப்படி கோகர்ண மகாபலேஷ்வர் ஆன்மாவின் புற வெளிப்பாடோ ?? அப்படியே தான் அத்திவரதரும் ஆன்மாவின் வெளிப்பாடு தான் முன்னது வைணவம் பின்னது சைவம் வெங்கடேஷ்

காலம் பெருமை

காலம் பெருமை  வண்ண / கலர் ஆடைகள் துணிகள் சூரியன் முன் வெளுத்துப்போகும் நீண்ட  நேரம் காய வைத்தால் அதே மாதிரி காலத்தினால் வேஷதாரிகள் அரிதாரமும் கலையும் வெங்கடேஷ்