“ சிவ கதி “ பெருமை – சிவவாக்கியர்
“ சிவ கதி “ பெருமை – சிவவாக்கியர் ஆனதே பதியது அற்றதே பசுபாசம் போனதே மலங்களும் புலன்களும் வினைகளும் கானகத்தே இட்ட தீயில் காற்று வந்து அடுத்தலோ ஆனகத்தில் வாயுவன்னி ஒன்றியே உலாவுமே பொருள் : சுத்த சிவத்துக்கு பசுத்தன்மை பாசம் இயற்கையிலே இன்றாம் உச்சியில் காற்றும் கனலும் கூடிய “ சிவ “அனுபவத்தால் , மும்மலம் வினைகள் புலன்கள் முதலிய எல்லா தத்துவங்களும் நாசமானதே கானகம் – சுழுமுனை உச்சி வெங்கடேஷ்