Pragmatic Front
Pragmatic Front Its not fair to Judge a book by its cover But You can judge humans by the way they treat animals BG Venkatesh
Pragmatic Front Its not fair to Judge a book by its cover But You can judge humans by the way they treat animals BG Venkatesh
மனதின் எல்லைகள் எது ?? கரணங்கள் – சித்தம் புத்தி ஐம்புலன் உணவு உறக்கம் மைத்துனம் தான் கற்ற கல்வி – அதன் அறிவு – சிற்றறிவு தான் தன் வீடு ஊர் நகரம் நாடு தன் சிறிய உறவு வட்டம் இது குளம் குட்டையில் வாழ்வதுக்கு சமம் வெங்கடேஷ்
” அகரமும் எட்டிரெண்டும்” – 2 8 *2 இரு கண்கள் எனில் ?? இரு கண் சேர்ந்தால் அது புருவ மத்தியாம் “ ம காரத்தில் “ தான் சேருமே அல்லாது 10 ஆம் வாசல் “ ய “ காரத்துக்கு ஏறாது அகரத்துக்கு ஏறாது நெற்றிக்கண்ணுக்கு ஏறாது அதனால் 8/2 – இரு கண்ணல்ல வெங்கடேஷ்
“ நெத்திச்சுட்டி – சன்மார்க்க விளக்கம் “ 1 இந்த ஆபரணம் பெண்கள் அணிவது இந்த கல் பதித்த நகை நெற்றி வகிடில் பதியுமாறு அணிவர் 2 “ நெற்றியில் நவமணிச்சுட்டியும் “ – கந்த சஷ்டி கவசம் இதன் உண்மை விளக்கம் : பிரணவத்தின் சூக்கும ஒளிகள் சிரசின் பிடரி மார்க்கமாக ஏறி வரும் ஒளி விடும் கல் / நவமணி : 9 சூக்கும பிரணவ ஒளிகள் வகிடு – மேலேறும் பாதை வெங்கடேஷ்
“ குழி – உள்ளும் வெளியும் “ சாலையில் இருக்கும் குழியில் இரு சக்கர வண்டி இறங்கினால் விபத்து உண்டாகி மரணம் சம்பவிக்கும் அதுவும் மழைக்காலத்தில் சொல்ல வேண்டியதிலை ஆனால் சிரசில் இருக்கும் குழியில் – உச்சிக்குழியில் நாம் இறங்கிவிட்டாலோ ?? உயிர் பிழைத்துவிடுவோம் எமன் கையில் சிக்க மாட்டோம் அகமும் புறமும் எப்படி மாறுபாடு?? வெங்கடேஷ்