“ கண்ணனும் – கண்மணியும்”
இந்த படம் பார்க்க :
கண்மணியில்
ரத்த நாளம் இல்லை – ரத்த ஓட்டம் இல்லை
ஆனாலும் உயிரோட்டத்துடன் இருப்பது வியப்பு விந்தை தானே??
கண்மணி உடலில் ஒட்டாமல் இருக்கிறது
கண்மணி அந்தரங்கமாய் உடலில் நிற்கிறது
கண்ணன் எப்படி உலகத்துடன் ஒட்டாமல் இருந்தானோ ??
வெண்ணெய் போல் பட்டும் படாமல் இருந்தானோ ??
அவ்வாறே தான் கண்மணியும்
ஆன்மா 36/96 தத்துவத்துடன் கலவாமல் இருப்பதினாலும்
அபெஜோதி எந்த ஆதாரமுமில்லாமல் நிற்கும் என்பதினாலும்
கண்மணியில் ரெண்டும் கலந்திருப்பதால்
இவ்வாறு அது உடலுடன் கலக்காமல்
வெண்மைப் படலத்தில் மிதக்குது
பாற்கடலில் கண்ணன் பள்ளி கொண்டிருப்பது மாதிரி
ஆகையால் கண்ணை பிடித்தால் கண்ணனைப் பிடித்துவிடலாம்
கண்ணில் இருப்பவன் கண்ணன்
வெங்கடேஷ்