அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம்

பாடல் 2:

கர்த்தாக்காலோரெழுத்து வழியும் சொல்வார்

கருச்சொல்வார் குருச்சொல்வார் களங்கமற்ற

பார்த்தாக்காற் சித்திமுத்தி யிரண்டுஞ் சொல்வார்

பரிவாக வாலை மூன்றெழுத்துஞ் சொல்வார்

சேர்த்தாக்காற் லெட்டோடே யிரண்டும் சொல்வார்

சிவஞ் சொல்வார் நாலுக்குமிடமும் சொல்வார்

பூத்தாக்காலாயிரத்தெட்டிதழின் வாசி

பூங்கமலத் திருவடியை பூசை செய்யே

விளக்கம்  :

மெய்ஞ்ஞான குரு யார் எனில் ??

ஓங்காரம் – அதின் பொருள் உரைப்பார்

கருவாம் தெய்வ நிலை உரைப்பார்

குரு ஆகிய ஆன்மா பத்தி விளக்குவார்

சித்தி / முத்தி என்றால் என்ன விளக்குவார்

முக்கோண வாலை மூன்றெழுத்து ரகசியம் எடுத்துரைப்பார்

எட்டிரெண்டு ரகசியம்  வெளிப்பட உரைப்பார்

சிவம் இருப்பிடம் சொல்வார்

நாலு வகை பாதமாம் – சரியை கிரியை யோகம் ஞானம்  உண்மை விளக்குவார்

1008 இதழ்க் கமலமாகிய புண்டரீக – வாசி  பெருமை கூறுவார்

இவை அனைத்துக்கும் ஆதாரமாக விளனுங்கும் திருவடி பூசை செய்வாயே

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s