ஆன்மாவும் – அபெஜோதியும்
ஆன்மா பெருமை யாதெனில் ??
உலகில் உள்ள ஜீவராசிகளின் மொத்த செல்வத்தையும்
ஒருவரே பெற்றாலும்
அது ஆன்மாவுக்கு ஈடாகாது
அதே மாதிரி
அண்ட கோடி மக்கள் யாவரும் கொள்ளை அடித்தாலும்
அதனால் அபெஜோதியின் செல்வ வளம்
அணுவளவும் குன்றாது விளங்கும் தன்மை உடைத்து
அருட்பா – 6ம் திருமுறை “ வரம்பில் வியப்பு “
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
உளவுயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
கருத்தெலாம் இனிதுதந் தருளித்
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
தந்தையைத் தடுப்பவர் யாரே.
வெங்கடேஷ்