“ வள்ளல் பெருமான் செய்த தவம்  – உண்மை பார்வை  “

“ வள்ளல் பெருமான் செய்த தவம்  – உண்மை பார்வை  “

என்ன ?? அவர் தவம் செய்தாரா ??

எல்லா சன்மார்க்க அன்பரும் எள்ளி நகையாடுவர்

அவர் ஜீவகாருண்ணியம் எனும் அன்னமிடுதல் செய்து தானே – யாரும் பெறற்கரிய  நிலை அடைந்தார் என்பர்

முத்தேக சித்தி மரணமிலாப்பெரு வாழ்வு எல்லாம் சோறு போட்டே அடைந்துவிட்டாராம்

நல்ல நகைச்சுவை வேடிக்கை இலையா ??

கீழ் காண்பனவற்றைப் படித்து , சரியாக புரிந்து கொண்டால் விளங்கும்

  1  அனுபவ மாலை

 28 வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்
தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.

விளக்கம் :

பிரமன் திருமால் பல காலம் தவம் புரிந்து , சிவத்தை ஆன்மாவை  காணாமல் இருக்க , நான் செய்த தவத்தல் கண்டு கொண்டேன்

அது என்ன எனில் ?

வள்ளலார் தம் பார்வை , மேல் ஆதார சக்கரத்தை தாண்டி செல்ல , அதன் தலைவரும் காண /ஏற முடியாத நிலை அனுபவம் தான் பெற்றனன் என பாடுகிறார்

  படம் பார்த்தால் புரியும் விளங்கும்

பார்வை மேலேற மேலேற தேவர்கள் நாம் கடந்து செல்வோம் – நாதம் அனுபவம் பெறுவோம் – அதம் மேல் ஆன்ம / நாதாந்த அனுபவம்

63 உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.

விளக்கம் :

எல்லா தேவர்களும் பிரமர் , நாராயணர் , உருத்திரர் என எல்லாரும் – உச்சிக்கு கீழ் இருக்க , நான் அவரை எல்லாம் தாண்டி சென்றனன்

நான் செய்த தவம் பெரிது என்கிறார்

எங்கே சன்மார்க்கம் ஒப்புக்கொள்ளுது ??

2   மெய்யருள் வியப்பு

அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
எனக்கும் உனக்கும்

விளக்கம் :

பிரமனும் திருமாலும் தேடி களைத்துப்போயினர்

நான் அனுபவத்தில் மேலேறுவதை கண்டு , இவன்  முன் ஜென்மத்தில் ஆற்றிய தவப் பயனால் , இது  நடக்குது என புலம்பினராம்

இது பார்வை மேலேறுதலைக் குறிக்குது – அதன் பயனால் அந்த அனுபவம் சித்தியானது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s