“ ஆறு ஆதார சக்கரங்கள் – தெளிவான பார்வை 2 “
பட்டினத்தார் பூரண மாலை
1 மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே!
2 உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே!
3 நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே!
4 உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே!
5 விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே!
6 நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே!
இதில் பட்டினத்தார் கூறுவது தலையில் இருக்கும் மேல் ஆதாரங்களே அல்லாது – கழுத்துக்கு கீழ் இருப்பவை அல்ல
எப்படி எனில் ??
வாலை தான் மூலாதாரத்து தெய்வம் – பெண் தேவதை
அவர் எங்கே முதுகுத் தண்டின் அடியில் மூலத்தில் இருப்பது ??
அதனால் அவர் கூற வருவது புருவ மையம் ஆகிய மூலம் தான் முதல் சக்கரம்
வாலை பூசை முதுகுத்தண்டின் அடியிலா உலகம் செயுது ??
நல்ல வேடிக்கை இலையா ?
அதுக்கு மேல் வரிசையாக மற்றவைகள்
படம் காண்க . தெளிவாக புரியும்
மேல் ஆதாரத்தில் ,
பிரணவம் மூன்று கண் இணைப்பில் உருவாவது
அதன் அடியில் மூலாதாரத்தில் – விநாயகன்
பிரணவத்தை தாங்கிக் கொண்டு இருப்பது
சுவாதிட்டானம் – பிரமன் அயன்
மணிபூரகம் – திருமால்
அனாகதம் – ருத்திரன்
விசுத்தி – மகேசன்
உச்சி – குண்டலினி – சுப்பிரமணி
தெய்வம் அதன் சார்ந்த வஸ்து , துர் நாற்றம் அடிக்கும் இடமாம் குய்யம் குதம் இடையே இருக்குமா ??
இது நான் கூறவில்லை
சாலை ஆண்டவர் ஒரு கேள்விக்கு பதிலாக கூறியிருக்கார்
அதை நான் இங்கே பயன்படுத்தியிருக்கேன்
சக்கர தேவதைகள் இருப்பது தலையில் தான்
வெங்கடேஷ்
படம் :
1 கீழ் ஆதாரங்கள் – வண்ண வண்ண படம்
2 மேல் ஆதாரங்கள் – நான் கைப்பட வரைந்தது