திருவள்ளுவர் ஞானவெட்டியான் மாலை

திருவள்ளுவர் ஞானவெட்டியான் மாலை

தீர்த்தமுமாடிக்கொள்வீர்- தெளிந்தவர்போல்

செபதபசாஸ்திரங்க ளோதிக்கொள்வீர்

யாத்திரைதீர்த்தங்களாடி- நதிகள் தோறும்

அலைந்துஅலைந்துசுற்றி அலைகிறீர்

மாற்றியேபிறப்பமென்று- பொய்ப்பிரட்டு

வாய்சமத்துசாஸ்திரஞ் சொல்மடையர்களே

பாத்திராபாத்திரமறியா- பாவிகள் தான்

பாடுபட்டுங்கூறறியாமாடுகள் தான்

விளக்கம் :

எல்லாம் அறிந்து தெளிந்துளோம் என்ற எண்ணத்தினால் , தீர்த்தம் ஆடியும்

சாத்திரம் கற்று , ஜெபம் தவம்    ஆற்றியும் , தேசம் எங்கும் அலைந்து , தேடி  புண்ணிய நதிகளில் தீர்த்தம் ஆடி பாவ நாசம் செய்துகொள்வீர்


இதனால் உள்ளுக்குளே – துவிஜன் நிலை அடைவோம் – தனக்குளே மீண்டும் பிறப்போம் என்று பொய் சொல்லித்திரிவீர்

தான் அரை என்ற நிலை மாறி முழுமை அடைதல் தான் மாற்ற்ப்பிறத்தல்

உள்ளுக்குளே மீண்டும் பிறத்தல்

மக்கள் எப்படி எனில் ??

தகுதி உடைய பாத்திரன் யார் ?

தகுதி இல்லா  அபாத்திரன் யார் ??

என பாகுபாடு பார்க்கத்தெரியாத பாவிகள்

உழைத்து பலன் கிடைக்கா மாடுகள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s