“ தளை – தலை – தழை “

“ தளை – தலை – தழை “ ஒரு  ஜீவன் தனக்கு இருக்கும் தளைகள் என்ன என அறிந்தால் தான் அதை அறுப்பது தலையாய கடமையாய் கொண்டால்   அதன் பயனால் கல்லாலில்  தழைக்கும்  அறிவுப்பிழம்பை கண்டு கனிந்து கூட முடியும் வெங்கடேஷ்

திருமந்திரம்

திருமந்திரம் தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை, யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஓதுமின், கேள்மின், உணர்மின், உணர்ந்தபின் ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே (திருமந்திரம் 301)  விளக்கம் : தேவர் தலைவனை அந்த அழகான தெய்வத்தை யார் தான் அறிவார் ? யார் ஒருவர் அறிகிறாரோ , அறிந்த பின் , அவனை பாடியும் , புகழ் பெருமை  கேட்டும் , அவன் உண்மை உணர்ந்து கொள்வர் அத்தகையோர் தம் அறிவில் ஓங்கி வளர்ந்திருப்பாரே வெங்கடேஷ்