அகத்தியர் ஞானம்
பார்க்கையிலே பவளவொளி பச்சைநீலம்
பருவான பொன்பசுமை வெண்மையைந்தும்
சேர்க்கையிலே சூரிய னுதயம்போல
செகசோதி பூரணத்தின் காந்தி தானும்
ஆர்க்கையிலே கொடுத்த பொருள் வாங்குமாப் போல
ஐந்துருவுமொன்றான வடிவேதோணுங்
காப்பது தபன் திருவடியே சரணமென்று
காத்தவர்க்குத்தீங்கில்லை கருணைதானே
விளக்கம் :
ஐந்து ஒளிகள்
செம்மை பச்சை நீலம் மஞ்சள் வெண்மை
இவை 5 இந்திரிய சக்திகள் ஆம்
திருவடியால் , தவத்தால் இவைகள் பிரணவத்தில் கலக்க வைத்தால் , அதன் பயனால் பூரண ஒளியாம் ஆன்ம ஒளி உச்சியில் பிரகாசிக்கும்
5 ஒளி கலவை தான் பஞ்ச வர்ணக்கிளி என்கின்றார் ஞானியர்
அதனால் திருவடியே கதி என்றிருந்து தவம் ஆற்றுவார்க்கு ஒரு தீமையுமிலை
இது தான் சத்திய ஞான சபையில் 5 படிகளாக வைக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது
வெங்கடேஷ்