குரு பெருமை கடமை

குரு பெருமை கடமை எப்படி ஒரு விளையாட்டு பயிற்சியாளர்  போட்டியில் பங்கேற்கமாட்டாரோ ?? வெற்றி பெற தேவையான  ஆலோசனை  மட்டும் வழங்குவாரோ ?? அவ்வாறே தான் ஆன்ம குருவும் தவப் பயிற்சிக்கும் மலங்களை வெல்லவும் எல்லாவித உதவிகளையும் வழங்குவாரே அல்லாது நமக்கு பதிலாக போரில் தர்ம யுத்தத்தில் போரிட மாட்டார் பாரத கண்ணன் மாதிரி அகமும் புறமும் ஒன்றே ஆம் வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை நிறங்களா??

மனிதரில் இத்தனை நிறங்களா?? பலர் தான் செயும் தப்பான காரியங்களை உலகுக்குத் தெரியாமல் செய்வர் பீடி சிகரெட் கூட தன் வீட்டிலிருந்து வெகு தூரம் சென்று பிடிப்பர் மற்றவர்க்கு தெரிந்து விடக்கூடாதாம் சிலரே தான் செயும் நல்ல தரும் காரியம் கூட உலகுக்கு தெரியா வண்ணம் பார்த்துக்கொள்கிறார் வெங்கடேஷ்

” காமுகன் –  காதலன் –  ஆன்ம சாதகன்”

” காமுகன் –  காதலன் –  ஆன்ம சாதகன்”  காமுகன்  : ஆடை துளைத்து உடல் காண்கிறான் காதலன் உடல் ஊடுருவி உயிர் காண்கிறான் ஆன்ம சாதகன் : உயிர் ஊடுருவி அபெஜோதி சுத்த சிவம் காண்கிறான் இது மனிதரின் பரிணாம வளர்ச்சிப்படிகள் வெங்கடேஷ்