திருவள்ளுவர் ஞானம் – வேதாந்த வீடு
எட்டுத்தூண் நட்டு
ஒரு விட்டம் போட்டு
எழுந்த அதன் மேல் அறுகுவளை
ஒன்றாய் கூட்டி மட்டற்ற மோட்டின்
வளையொன்று நாட்டி
வளமான துண்டும்வளைரெண்டும்
போட்டு கட்டாக கையகத்தில்
வளைத்துக் கொண்டு கனமான
வரிச்சல் விலாக்கொடியுமாக்கி
முட்டமுட்ட நின்ற
அகம் பத்து மேலாய்
முகப்புடனே சிங்கார
வீடும் ஆச்சே
விளக்கம் :
சிரசில் மண்டை எட்டு எலும்பால் அமைக்கப்பட்டிருப்பது கபாலம்
அது தான் சத்திய ஞான சபை எட்டு பக்கம் அமைப்புடையது
அதன் மேல் சுழிமுனை வட்டம்
மேல் ஆறாதாரம் கூட்டி, சோமசூரியாக்கினி கலைகள் ஒன்றாக்கி அங்கு சேர்த்து , எட்டிரெண்டும் கூட்டி அங்கு கட்டி வைத்தால் , தூணின் உச்சியில் ஞான வீடு உருவானதே
மோன வீடும் அது தான்
அதில் உறையும் ஆன்மா சுந்தரம் ஆனதால் , அது அழகான வீடும் ஆச்சே
இது வேதாந்த வீடும் ஆம்
வெங்கடேஷ்