அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம்

விந்துகட்டசுழிமுனைகண் ணொளியைப்பாரு

வழிரேகையைப்பாரு சுழியைப்பாரு

அந்தவட்டத்தோங்கார மதனைப்பாரு

ஐந்து பஞ்சாட்சரத்தைப்பாரு

விந்துவிட்டுப் போகாதே விந்தைக்கட்டு

விதரணையாய்தோமுகத்தி லிருந்து பாரு

விந்தை விட்டால் யோகிகட்குச் சலனம் விந்து

விடாமலே வேதாந்தக் கயிறிற்கட்டே

விளக்கம் :

ஞானம் அடைய என்ன செயணும் என விளக்குகிறார் சித்தர் அகத்தியர்

பெருமான்

சுழிமுனை உச்சியில் விளங்கும் பிரம ஜோதி – ஆன்ம ஒளி பார்ப்பாயாக

சுழிமுனை நாடி பார்ப்பாயாக

அந்த சுழி வட்டத்தில் பிரணவமாம் ஒளிகளை சேர்த்துக்கட்டுவாயாக

பஞ்சாட்சரமாம் –  ந ம சி வ ய ஆகும் பஞ்ச பூத ஒளிகளை ஓங்காரத்துடன் கூட்டுவாயாக

விந்துவை வீணாக்காமல் – அதை மேலேற்றி சுழிமுனை  உச்சியில் கட்டுவாயாக

விந்து வீணானால் மனம் விகாரம் அடையும் – உடல் கட்டு கெடும்

அதனால் அதை வேதாந்தமாகிய உச்சியில் கட்டுவாயாக

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s