அகத்தியர் ஞானம்
நூல்பாரு கொங்கணவர் கடைக்காண்டத்தின்
நுணக்கமெல்லாமதிற்றோணும் பூசைதீட்சை
பால்சீனிபழந்தேன்கற்கண்டு வைந்துமாகும்
பால்திரட்டுயுண்டருசி போலேகாணும்
மூலகுரு மந்திரமு மமிர்தந்தன்னில்
மூட்டினார்நியாயவகை யெல்லாஞ் சொன்னார்
கால்பாருதலைபாரு புனலைப்பாரு
கண்காது மூக்கி துவாய்க் கண்டவாரே
பொருள்:
கொங்கணவர் கடைக்காண்டம் எனும் நூல் பார்
அதில் கூறப்பட்டிருக்கும் பூசை முறை எல்லா நுணுக்கம் தெரிவிக்கும்
அது பால் சர்க்கரை தேன் கற்கண்டு கனி என 5 கலந்தது போல் இனிப்பாக இருக்கும்
அவர் மூல மந்திரம் – அமுதம் உற்பத்தி செயும் வகை சொல்லி இருக்கிறார்
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் பற்றி விளக்கியுள்ளாரே
இவைகள் 5 பூதங்களின் சுத்தமான நிலை
இவைகள் இல்லாமல் ஞானம் அடைதலும் – முத்தேக சித்தி அடைதலும் இல்லை
வெங்கடேஷ்