ஆடுதுறை – சுழுமுனை உச்சி பெருமை – அகத்தியர் துறையறி விளக்கம்
அங்கிரவி யிபமுகவ னிடத்தில் நின்று
இடைவழியே தடுமாறா தேறிச் சென்றால்
நீங்கிவிடுந் தமர்வாச லூடு சென்றால்
நிலையறியா தொருமனதாய் நின்றாலுள்ளே
வாங்கிவிடும் “ஒளிக்குள் சிலம்பொலி” தானங்கே
மாட்டுவிக்கும் தடுமாறா தேறிநில்லு
தூங்குவதோ திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனுஞ் சந்திரனுந் தோற்றமாமே
விளக்கம் :
முச்சுடர்களும் சங்கமித்து , சுழிமுனை வாசல் வழி கலங்காமல் ஏறி , மேல் சென்றால், நாதமும் ஒளியும் ஒன்றாய் கலந்து பார்க்கலுமாம்
உச்சியில் பரஒளியுடன் சோமசூரியாக்கினி கலைகள் பிரகாசிக்குமே
வெங்கடேஷ்