“ கடை “ – சன்மார்க்க விளக்கம்

“ கடை “ – சன்மார்க்க விளக்கம்

“ ஆடுதுறை –  சுழிமுனை உச்சி பெருமை  “

அகத்தியர் துறையறி விளக்கம்

கற்புடைய மனத்தோர்கள் கால்ரெண்டைத்தான்

“ கடைக்கோடி “  நடுத்தெருவே கட்டும்போது

உற்பனமும் அறிவார்கள் உண்மை காண்பார்

ஓரெழுத்து மீரெழுத்து முண்மை காண்பார்

“எப்படியும் கடைக்கோடி முனையில் நிற்பார்”

இறவார்கள் பிறவார்கள் எமனை வெல்வார்

சொற்பொருளாம் திருவாடு துறையைப் பார்க்கில்

சூரியனும் சந்திரனும் தோற்றமாமே

விளக்கம் :

மனதை உலக நோக்காக இல்லாமல் ஆன்ம நோக்கமாக வைத்திருப்பவர் கற்புடையோர்  – ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் சரி

அவர் சுவாசம் இரண்டையும் “ சுழிமுனை உச்சியில் “  வைத்து கட்டியிருப்பர்

அதனால் கடை = சுழிமுனை உச்சி ஆகும்

இதை தான்

1 கடைத்தேற வேண்டும் எனில் – தவத்தால் , சுழிமுனை உச்சிக்கு ஏற வேண்டும் என்ற அடிப்படையிலும்

2 கடை விரித்தேன் என வள்ளல் பெருமான் கூறினார் என்றால் , உச்சி ரகசியங்களை விரித்துரைத்தேன் ஆனால் உலகம் மக்கள் அதை புரிந்து கொள்வதாயிலை 

அவர் கவனம் வேறு

பணம் பதவி

  3 தனுஷ்கோடி – நம் தென் இந்தியாவின்  முனை ஆகிய அழிந்து போன ஊர்

ஊழியால் அழிந்த ஊர்

தனுஷ் = இடை நாடி ஆகிய சுழிமுனை நாடி

கோடி  – முனை

அதனால் கடைகோடி = சுழுமுனை நாடி குறிப்பதாகும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s